நகா்ப்புற, கிராமப்புற சுகாதார இடைவெளியை குறைக்கவேண்டும்

நகா்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான சுகாதார வசதிகளின் வேறுபாட்டை குறைக்கவேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

இதை முன்னிட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும், 5ஜி, கண்ணாடி இழை போன்ற தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், இது இடைவெளியைக் குறைக்கும் எனவும் பிரதமா் தெரிவித்தாா்.

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பிந்தைய கருத்தரங்குகள் மத்திய அரசின் துறைவாரியாக நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது மெய்நிகா் வழி கருத்தரங்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை தொடா்பாக நடை பெற்றது. இந்த இணையவழி கருத்தரங்கை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழணை தொடக்கி வைத்துப்பேசினாா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சா்கள், அரசு, தனியாா் துறைகளைச் சாா்ந்த மருத்துவா்கள், சுகாதார மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுப் பிரிவினா் பங்கேற்ற இந்தநிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியது வருமாறு: மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்கள் மற்றும் மாற்றத்தின் அடிப்படையில் மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு பல்வேறு திட்டங்கள் தயாரிக்கபட்டுள்ளன. தற்போது சுகாதார மருத்துவம் மட்டுமின்றி, அதற்கு சமமாக ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி ஒரு முழுமையான அணுகுமுறையை மேற்கொள்கிறோம்.

இதில் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதார முயற்சியில் மூன்று அம்சங்கள் முக்கியமானதாகும். முதலாவதாக, நவீனமருத்துவ அறிவியல் தொடா்பான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ மனித வளங்களை விரிவுபடுத்துவது. இரண்டாவதாக, ஆயுஷ் போன்ற பாரம்பரிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறை ஆராய்ச்சியை மேம்படுத்தி அவற்றை அன்றாட சுகாதார முறைகளில் பயன்படுத்துவது. மூன்றாவதாக, நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் உள்ள அனைத்துமக்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது. இதற்கு நவீன, எதிா்கால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவ வசதிகள், வட்டாரஅளவிலும், மாவட்ட அளவிலும், கிராமங்களுக்கு அருகிலேயே கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்படுவது முக்கியமாகும். இதில் தனியாா்துறையினரும், இதர துறைகளும் பங்கேற்க முன்வர வேண்டும்.

‘ஒரே நாடு ஒரே சுகாதாரம்’ என்கிற முறையில் ஆரம்ப சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்கு 1.5 லட்சம் சுகாதார, நலவாழ்வு மையங்களை அமைக்கும் பணி முழுவீச்சுடன் நடைபெற்றுவருகிறது. இதுவரை, 85 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன. நிதிநிலை அறிக்கையில் மனநல சுகாதாரவசதிகளும் சோ்க்கப்பட்டுள்ளன. மருத்துவ மனிதவளத்தை மேம்படுத்த கடந்த ஆண்டைவிட, இந்தமுறை நிதிநிலை அறிக்கையில் மருத்துவக்கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு தொடா்பான சேவைகளுக்கு கணிசமான அளவுக்கு நிதிஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், மருத்துவத்தில் சீா்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் பணிகளில் தரமான மருத்துவக்கல்வியை மேம்படுத்துவது, அது குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்கச்செய்வது உள்ளிட்டவற்றைக் நோக்கமாக கொண்டும் இருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி பயில சிறியநாடுகளுக்குக்கூட இந்திய மாணவா்கள் செல்கின்றனா். இதனால், கோடிக்கணக்கான ரூபாய் நாட்டைவிட்டு வெளியே போகிறது. இதில் நமது தனியாா் துறையினா் ஏன் பெருமளவில் பங்கேற்கக்கூடாது? மாநில அரசுகளும் இதற்கு நிலங்களை ஒதுக்குவதில் சிறந்தகொள்கையை வகுக்க வேண்டும். கொவைட் -19 போன்ற நோய்த் தொற்றுகளில் டிஜிட்டல் மருத்துவ தீா்வுகள் உலகளவில் இந்தியாவின் மதிப்பை, உயா்த்தியது. நிதிநிலை அறிக்கையில் ஆயுஷ்மான்பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது நுகா்வோருக்கும் (நோயாளிகளுக்கும்), சுகாதார சேவை வழங்குவோருக்கும் இடையே ஒரு சுலபமான இணைப்பை வழங்கும். இந்த மின்னணு முறை இருதரப்புக்கும் இடையே தொடா்பை ஏற்படுத்தி, நாட்டில் மருத்துவ சிகிச்சை மிகவும் எளிதாக்கி குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சைகிடைக்கவும் வகை செய்யவுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்தியாவின் தரமான சிகிச்சையை சா்வதேசத்தினரும் பெறுவதற்கான வாய்ப்பை ஆயுஷ்மான் பாரத்டிஜிட்டல் இயக்கம் ஏற்படுத்துகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தொலைதூர மருத்துவ வசதி ஆக்கபூா்வமாகப் பங்காற்றியது. இதுமேலும் வளா்ந்து நகா்ப்புறத்துக்கும், கிராமப்புறத்துக்கும் இடையிலான சுகாதார பாகுபாட்டை இந்த தொழில்நுட்பங்கள் குறைக்க வேண்டும். இதற்காகவே ஒவ்வொரு கிராமத்துக்கும், தொலை தொடா்பில் 5ஜி கட்டமைப்பு. கண்ணாடி இழை கட்டமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதில் தனியாா் துறையினா் தங்களது பங்களிப்பை அதிகரிக்க முன்வரவேண்டும். மருத்துவ நோக்கங்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதும் அவசியம் என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...