சிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்

பிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் மோடியின் கரமே முக்கியமானது. ஆனால், சிறுவயதில் நரேந்தர் என்கிற மோடியின் கரமே காங்கிரஸ் கொடியைச் சுமந்துவிற்ற தகவல் யாருக்குமே ஆச்சர்யம் தரக்கூடியது. ஆம்… தன் சிறுவயதில் காங்கிரஸ் கட்சியின் அபிமானியாக இருந்துள்ளார் மோடி. வத்நகரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள் நடைபெற உதவியாக இருந்துள்ளார்.

மோடியின் சொந்த ஊரான வத்நகரில் ரஷிகாபாய்தேவ் என்ற காங்கிரஸ் கட்சித தலைவர் இருந்தார். இவர், ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் சிறுவயது மோடி, பால்ய கரசேவகராகப் பங்கேற்றுள்ளார். இந்தத்தகவலை `the Man of the Moment: Narendra Modi’ என்ற மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய எம்வி.காமத், கலின்டி ரந்தேரி ஆகியோர் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில், 1956-ம் ஆண்டு ரஷிகா பாய் தேவ் ஏற்பாடு செய்த கூட்டங்களில் சிறுவனாக இருந்த மோடி, உதவி புரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதோடு, காங்கிரஸ் கட்சியின் கொடிகள், பேட்ஜுகளையும் கூட்டத்தினரிடையே விற்பனை செய்ததாகவும் காங்கிரஸ் கட்சித்தலைவர் ரஷிகாபாய், சிறுவன் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டியதாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வத்நகரைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் கட்சித் தலைவர் துவாரகாதாஸ் ஜோஷியும் இந்தத்தகவலை உறுதிப்படுத்தி யுள்ளதாகப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் துவாரகாதாஸ் ஜோஷி, வினோபா பாவேயின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பவர்.

வினோபாவே போலவே, கடந்த 2009-ம் ஆண்டு 21 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து துவாரகாதாஸ் ஜோஷி உயிர் துறந்தார். அப்போது, குஜராத்மாநில முதல்வாக இருந்த மோடி நேரில் வந்து, துவாரகா ஜோஷியின் உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வளர்ந்து பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக மோடி உயர்ந்தபோதும், ரஷிகா பாய் தேவுடனான தொடர்பை கடைசி வரை அவர் கைவிடவில்லை. 1999-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக மோடி இருந்தார். இந்தச்சமயத்தில், வத்நகர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரஷிகாபாய் தேவ் பங்கேற்றார். இந்தவிழாவுக்கு வந்த மோடி, ரஷிகா பாய் தேவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

அங்கே இருந்த சிலர், `கிராமத்தில் சாமிக்குப் பூஜித்து வைக்கப் பட்டிருக்கும் மஞ்சள் நிற பூவைத் தொட்டால் உன் மகன் குணமடைந்து விடுவான்’ என்று தாயிடம் சொல்கின்றனர். தாய், கோயிலுக்கு ஓடுகிறார். கோயிலில் இருந்தபூசாரியோ, தாயைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. `ஒரே ஒரு பூவையாவது தாருங்கள்’ என்று அந்தத்தாய் கெஞ்சுகிறார். முடிவில், இரக்கப்பட்ட பூசாரி ஒருபூவை எடுத்துக்கொடுக்கிறார். இதனால், சிறுவன் உயிர் பிழைத்துக் கொள்கிறான். இப்படியாகச் செல்லும் கதையின் முடிவில், `கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம், கடவுளிடத்தில் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது’ என்கிற மெசேஜை மக்களிடத்தில் நரேந்தர் சொல்கிறார்.

அந்தக் காலகட்டத்தில், மோடி எழுதி நடித்த இந்த நாடகம் வத்நகரில் பிரபலமாகப் பேசப்பட்டதாக மக்கள் சொல்கிறார்கள் என்று ‘the Man of the Moment: Narendra Modi’ புத்தகத்தை எழுதிய வர்களில் ஒருவரான கலின்டி ரந்தேரி குறிப்பிட்டுள்ளார். வத்நகர் கோயிலில் பூசாரி, பட்டியலினப் பெண் ஒருவரைத் துரத்திவிட்டதை ஒருமுறை நேரில் கண்ட மோடி, அதனடிப்படையில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.

பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...