ஐயா காமராசரைப்பார்க்க “சோ” அவர்கள் ஒருமுறை சென்றபோது காமராசர் தயிர்சாதமும் கீரையும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது காமராசர் சோ-வைப்பார்த்து ஏப்பா நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்,ஒருநாளாவது உன்னைச்
சாப்பிடு என்று சொல்லியிருக்கேனா என்று கேட்டுள்ளார்.
அதற்கு சோ பரவாயில்லைங்க ஐயா நீங்க சாப்பிடுங்க என்று சொல்லி உள்ளார். ஆனால் காமராசர் விடவில்லை. இல்லை இல்லை சொல்லு ஒருநாளாவது சொன்னேனா சொல்லு என்று அதட்டலாகக் கேட்க, இல்லைங்க சொல்லலை என்று கூறியுள்ளார்.
அதற்கு காமராசர் சொன்னாராம் ஏன் சொல்லலை தெரியுமா நான் சாப்பிடுற இந்தச்சோறே தமிழக மக்கள் எனக்குப்போடும் பிச்சைச்சோறப்பா இதில் நான் என்னத்த உனக்கு கொடுக்க என்றுதான் சொல்லாமலிருந்தேன் நீ தப்பா நினைச்சுக்காதே என்றாராம்.
இதைக்கேட்ட சோ தன்னையறியாமல் அழுதுவிட்டாராம். எப்படி தலைவர் என்று எண்ணிப்
பாருங்கள். எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இப்படி ஒரு மாமனிதர் கிடைப்பாரா?
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
3vicissitude