” வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக 2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புகிறேன்,” எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜெரோதா(Zerodha) நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் ‘பாட்காஸ்ட்’ டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். இதில் தனது குழந்தை பருவம், கல்வி, அரசியலில் நுழைந்தது, பின்னடைவு, நெருக்கடியை கையாண்டது மற்றும் கொள்கை மேலாண்மை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் பேசி உள்ளார்.
இதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: இளம் பருவத்தில் எனது குடும்பத்தினரின் ஆடைகளை நான் துவைத்துள்ளேன். இதன் மூலம் குளத்திற்கு செல்ல எனக்கு அனுமதி கிடைத்தது.பள்ளியில் படித்த போது, எந்த வகையிலும் நான் கவனம் பெறாத நபராக இருந்தேன். ஆனால், எனது ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தனர்.
மேலும், அவர் அதற்கு என்ன காரணம் தெரியுமா எனக்கேட்டதுடன், அதற்கான விளக்கத்தையும் அவரே கூறினார். ‘உங்களுக்கும் எனக்கும் சிறப்பான உறவு உள்ளது. சீன தத்துவஞானி ஹியுன் சங், உங்கள் கிராமத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்து சீனா திரும்பினார். அவர் எனது கிராமத்தில் வாழ்ந்தார் என்றார்’.
மத்தியில் எனது முதல் ஆட்சி காலத்தில் மக்கள் என்னை புரிந்து கொள்ள முயற்சித்தனர். நான் டில்லியை புரிந்து கொள்ள முயன்றேன். இரண்டாவது ஆட்சி காலத்தில், கடந்த கால கண்ணோட்டத்தில் சிந்தித்தேன். மூன்றாவது ஆட்சி காலத்தில், எனது சிந்தனை மாறி உள்ளது. மன உறுதி உறுதியாக உள்ளது. கனவு அதிகரித்து உள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்காக 2047 க்குள் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புகிறேன். நாட்டில், உண்மையான சமூக நீதி மற்றும் மத சார்பின்மை உள்ளது.
சந்திரயான் -2 விண்கலம் ஏவுவதை பார்க்க நான் செல்வதை பலர் விரும்பவில்லை. அவர்கள் என்னிடம்,’ இது நிச்சயம் இல்லாதது. அனைத்து நாடுகளும் தோல்வியை சந்தித்து உள்ளன. 5 அல்லது 6வது முறை முயற்சிக்கு பிறதே அந்நாடுகள் வெற்றி பெற்றுள்ளன. ஏதாவது நடந்தால் என்ன ஆவது’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நான் அவர்களிடம், ‘அதனால் என்ன? தற்போது எனக்கு எந்த பொறுப்பும் கிடையாதா?’ எனக்கூறி விட்டு சென்றேன். சந்திரயான் -2 விண்கலம் கடைசி நொடியில் நொறுங்கியது. அங்கு இருந்தவர்கள் அனைவரும் கவலையடைந்தனர். இது குறித்து பிரதமரிடம் தெரிவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இது மிகப்பெரிய பின்னடைவு என்பதால், அன்றைய இரவு என்னால் தூங்க முடியவில்லை. இதனால், இந்த திட்டத்தில் உழைத்த விஞ்ஞானிகளை சந்தித்து கலந்துரையாட எண்ணினேன்.
தனக்கு ஏற்படும் பின்னடைவை பார்த்து வாழ்க்கை முழுதும் அழும் நபர் நான் அல்ல. மறுநாள் காலை நேரில் சென்று, விஞ்ஞானிகளை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களுக்கு என்னால் முடிந்தளவு நம்பிக்கையை ஏற்படுத்தினேன். சந்திரயான்-3 வெற்றிகரமாக அமைந்தது.
அரசியலில் ‘ரிஸ்க்’ எடுக்க நிறைய முன்னேற்பாடுகள் தேவை. ஒருவர், ஒவ்வொரு தருணமும் ‘ ரிஸ்க்’ எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ஆன்லைனில் உலா வரும் மீம்களை பார்ப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்: மீம்கள் மற்றும் ஆன்லைன் விவாதங்களை நினைத்து எனது நேரத்தை வீணடிக்க மாட்டேன். நான் உணவுப்பிரியன் கிடையாது. எந்த நாட்டிலும் எனக்கு தரப்படும் உணவை மகிழ்ச்சியாக உண்பேன். உணவுப்பட்டியலை என்னிடம் கொடுத்தால், எந்த உணவை சாப்பிடுவது என முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற போது என்னிடம் பலர், ‘ நீங்கள் குஜராத்தியா? ஹிந்தி எப்படி தெரியும்’ எனக் கேட்பார்கள். அதற்கு நான், ‘ரயில் நிலையத்தில் விற்பனையாளர்களிடம் பேசி கற்றுக் கொண்டேன்’ என பதிலளிப்பேன்.
நான் குஜராத் முதல்வரான பிறகு, எனது பழைய நண்பர்களை முதல்வர் இல்லத்திற்கு அழைக்க விரும்பினேன். அதன்படி நானும் அழைத்தேன். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அவர்களை நான் நண்பர்களாக பார்க்க எண்ணினேன். ஆனால், அவர்கள் என்னை முதல்வராக பார்த்தனர்.
நான் முதல்வராக இருந்த போது, எனது முயற்சியில் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விட மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இரண்டாவதாக, எனக்காக நான் எதையும் செய்ய மாட்டேன் எனவும், மூன்றாவதாக நானும் மனிதன். நானும் தவறு செய்யலாம். ஆனால், தவறான எண்ணத்தில் தவறு செய்ய மாட்டேன் எனக்கூறியிருந்தேன். இதனை எனது தாரக மந்திரமாக வைத்துள்ளேன். தவறு செய்வது மனித இயல்பு. நானும் மனிதன் தான். கடவுள் கிடையாது.
2014 ல் நான் பிரதமர் ஆன பிறகு உலக தலைவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். சீன அதிபர் ஷி ஜின்பிங் என்னுடன் பேசும் போது, இந்தியா வர விரும்புவதாக கூறினார். அதற்கு நான், ‘நீங்கள் வரலாம். கட்டாயம் வர வேண்டும்’ என்றேன்.
அதற்கு அவர்,’ அவர் நான் குஜராத் வர வேண்டும். உங்கள் கிராமமான வாத் நகர் செல்ல வேண்டும்’ எனக்கூறினார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |