ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால் அவர் அதை அப்போதே வேறு மாதிரியாக கையாண்டிருப்பார்.படேல்போன்றே நேருவும் தேசபக்தர்தான், நல்ல மனிதர்தான். ஆனால், நாட்டை ஆளும் தலைவர் நல்லவராக இருந்தாலும் வல்லவராக இல்லா விட்டால் அந்த நாட்டுக்குப் பிரச்னைகள் தான் வரும் என்பதற்கு ஜம்மு-காஷ்மீர் நல்ல உதாரணம்.
படேலின் புத்திசாலித்தனத் தாலேயே 370-ஆவது சட்ட பிரிவில் “தற்காலிகமானது’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. அவர் சேர்த்த அந்தவார்த்தைதான் இப்போது நமக்கு உதவியுள்ளது.
சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு புத்திசாலித் தனத்துடன் செயல்பட்டுள்ளது. இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2015-இல் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அவர்களுடன் கூட்டணியில் இருந்த போது இதற்காக தனக்குத் தேவையான விஷயங்களைத் தெரிந்துகொண்டது. எதற்காக பாஜக தன்னுடன் கூட்டணி அமைத்தது என்பதை மெஹபூபா முஃப்தி தெரிந்து கொள்ளும் முன்னதாக, அந்தக் கூட்டணியில் இருந்து விலகி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
இதற்கிடையே, கடந்த 2009 முதல் அந்த மாநிலத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து வருவதையும், உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததையும் கணக்கில் கொண்டது பாஜக.
இதற்கிடையேதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 2016-இல் 3,415 ஆக இருந்த கல்லெறி சம்பவங்கள், 2017-இல் வெறும் 51 ஆக குறைந்தன. பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கையும் வெகுவாககுறைந்தது. சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் ஏதாவது பிரச்னை வருமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே, அதற்கும் முன்னதாக முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பிறகு, அந்த மாநிலத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வளவும் செய்த பிறகே அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
காஷ்மீரின் நிலைமை வரும்நாள்களில் இயல்பாக இருக்கும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சேமிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும்
எஸ்.குருமூர்த்தி
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |