தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டாகேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருது செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப் பட்டுள்ள “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’களை அடைவதற்கான முயற்சிகளை தங்கள் நாட்டிலோ அல்லது பல்வேறு நாடுகளிலோ வெற்றிகரமாகச் செயல் படுத்தும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு “குளோபல் கோல்கீப்பர்’ விருதை பில் மற்றும் மெலிண்டா அறக் கட்டளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், “தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கு பிரதமர் மோடி வழங்கிய பங்களிப்புக்காக, இந்த ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்படவுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விருதுவழங்கும் நிகழ்ச்சி நியூயார்க் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அறக்கட்டளை இணை நிறுவனர் பில் கேட்ஸிடமிருந்து “குளோபல் கோல்கீப்பர்’ விருதைப் பெற்று, பிரதமர் மோடி பேசியதாவது:
மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தில் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்குமட்டும் கிடைத்த விருது அல்ல; நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்தவிருது. “தூய்மை இந்தியா’ திட்டத்தின் வெற்றி மிகச் சிறப்பானது. இத்திட்டமானது, நாட்டிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், ஐ.நா. சபையால் நிர்ணயிக்கப்பட்டுள்ள “நீடித்தவளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் உதவியது.
சமர்ப்பணம்: “தூய்மை இந்தியா’ திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வர்களுக்கும், அன்றாடப் பணிகளில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் களுக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |