இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக தனதுகூட்டணி கட்சிகளிடம் ஆதரவுகோரி வருகிறது.

சில நாட்களுக்கு முன் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜய காந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினர். ஆனால் முக்கிய கூட்டணி கட்சியான பாஜகவிடம் ஆதரவு கோராமல் இருந்தது. முன்னதாக, இருகட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில்,

பாஜக உடனான கூட்டணி தொடர்வதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும், அதிமுக உடனான கூட்டணி தொடர்வதாக  வானதி ஸ்ரீனிவாசனும் தெரிவித்து வந்தநிலையில், இன்று பாஜக அலுவலகம் சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவுகோரினார்.

இச்சந்திப்பிற்கு பின், நிருபர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜ.,விற்கு தலைவர் இல்லாததால் மேலிடதலைமையிடம் அதிமுக ஆதரவு கோரியது. மேலும், அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் என்னை சந்தித்து ஆதரவுகோரினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக  ஆதரவு அளிக்கிறது.

அதிமுக வெற்றிக்காக பாஜக ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாடுபடுவர். பிரசாரம் மேற்கொள்ளும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில்முறைப்படி வெளியிடப்படும். இரு தொகுதிகளிலும் திமுக, காங்., கட்சியை தோற்கடிக்க அ.தி.மு.க.,வுடன் இணைந்து பாஜ செயல்படும். அதிமுக, பாஜக  சார்பில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்தன” என்று கூறியுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...