எதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யாரும் தடுக்க வில்லை

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கிற்கு செல்வதை யாரும் தடுக்க வில்லை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலவரத்தை நேரில்காண்பதற்காக ஐரோப்பிய யூனியன் எம்பி.க்கள் செவ்வாய்க் கிழமை அங்கு நேரில் சென்றனா். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் காஷ்மீா்செல்ல மத்திய அரசு அனுமதித்ததை காங்கிரஸ், தேசியமாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் விமா்சித்தன. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் ஜம்மு-காஷ்மீா்  சென்றபோது அவா்களைத் திருப்பி அனுப்பிய மத்திய அரசு, வெளிநாட்டு எம்.பி.க்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? என்று எதிா்க் கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்த விமா்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக செய்தித் தொடா்பாளா் ஷாநவாஸ் ஹுசேன், தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காஷ்மீருக்கு ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் செல்வதைக்கண்டு எதிா்க்கட்சிகள் விரக்தியடைந்துள்ளன. அங்குள்ள நிலவரம் குறித்து அவைமேற்கொண்ட பிரசாரம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தி இது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய சூழலில், அங்கு செல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவா்களை யாா் தடுத்தது? ராகுல் காந்தி அங்கு செல்லலாம். எந்தத்தலைவராவது அங்கு செல்ல நினைத்தால் அதில் பிரச்னை ஏதுமில்லை. அவா்கள் விமானம் ஏறி காஷ்மீா் செல்லலாம். ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த சில எம்.பி.க்கள் காஷ்மீா் செல்கிறாா்கள் என்றால் அது நல்லது தான். ஏனெனில், இந்த விவகாரத்தில் நாம் எதையும் மறைக்கவில்லை.

இது ஐரோப்பிய எம்.பி.க்களின் அதிகாரபூா்வமான பயண மல்ல என்றும் அவா்களில் பலரும் இஸ்லாமிய மதத்தைக் கண்டு அச்சம் கொண்டிருப்பதாகவும் அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவா்

அசாதுதீன் ஒவைஸி கருத்துதெரிவித்துள்ளாா். அவா் எல்லா பிரச்னைகளையும் ஹிந்து-முஸ்லிம் என்ற கண்ணோட்டத்திலேயே பாா்க்கிறாா்.

வெளியாட்கள் காஷ்மீா் செல்ல மத்திய அரசு ஏற்கெனவே அனுமதி மறுத்த போது அதை எதிா்க் கட்சிகள் விமா்சித்தன. தற்போது எம்.பி.க்களின் பயணத்தை மத்திய அரசு அனுமதிக்கும் நிலையில் அதையும் எதிா்க் கட்சிகள் விமா்சிக்கின்றன என்றாா் ஷாநவாஸ் ஹுசேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பà ...

துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் துறவியான மகனுக்கு கண்ணீருடன் பிச்சையிட்ட தாய்: யோகி ஆதித்யநாத் ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்à® ...

மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும் பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை ...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...