50 சதவீத அதிகாரப்பகிர்வை பாஜக ஒருபோதும் ஏற்கவில்லை:

மகாராஷ்டிர மாநில சட்ட மன்றத் தொகுதி பங்கீடுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப்பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்ததிட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

செய்தியாளர்கள் இன்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸை சந்தித்து பேசினார்கள். அப்பொழுது சிவசேனை கட்சி 50 சதவீத அதிகாரப் பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனை முதல்வர், அமைச்சரவையில் சரி பாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனை முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தை பாஜக ஏற்கனவே ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறது.

இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என்று செய்தி யாளர்கள் கேட்டனர்.

தேர்தலுக்கு முன்பே 50 சதவீத  அதிகார பங்கீடு என்ற திட்டத்தை சிவசேனை முன் வைத்தது உண்மைதான். ஆனால் சிவசேனை முன்வைத்த அந்தத்திட்டத்தை பாரதீய ஜனதா ஒருபோதும் ஏற்றுக் கொள்ள வில்லை என பட்னாவிஸ் தெளிவுபடுத்தினார்.

இப்படி தேக்கநிலையில் பெரும்பான்மை கூட்டணி கட்சிகள் இரண்டும்  இருந்தால் மந்திரிசபை அமைப்பதற்கான முயற்சிகள் எப்படி வெற்றி பெறும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ”பாரதீய ஜனதா கட்சியிடம் மாற்றுத் திட்டங்கள் பல இருக்கின்றன என்று பட்னாவிஸ் குறிப்பிட்டார்.

அந்த மாற்றுத் திட்டங்கள் பற்றி அவர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

சென்ற அமைச் சரவையில்  25  கேபினட் இடங்களில் 6 இடங்கள் சிவசேனைவசம் இருந்தன. துணை அமைச்சர் களுக்கான 18 இடங்களில் 7 சிவசேனை அமைச்சர்கள்வசம் இருந்தன.

இப்பொழுது சில இடங்களை கூடுதலாக சிவசேனைக்கு ஒதுக்கினால் அவர்கள் சம்மதிக்ககூடும். ஆனால் அவர்களின் சம்மதத்தைப் பெறுவது மிகவும் கடினமான விஷயம். இறுதியில் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சரவையில் செயல்படுவார்கள் என பெயர் கூற விரும்பாத பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...