தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மொத்தம், நான்குமருத்துவ சாதனங்கள் பூங்காவை அமைப்பதற்கு, மத்திய அரசு அனுமதிவழங்கி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், உலக தரத்திலான மருத்துவ வசதி குறைந்த விலையில் கிடைப்பதற்கு உதவும் வகையிலும், இந்த பூங்காக்களுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆலைகளை எளிதில் அமைத்து, உற்பத்தியில் ஈடுபடும்வகையில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தபூங்காக்கள் அமைக்கப்படும்.
இந்த பூங்காக்களில் ஆலைகள் அமைக்கப் படுவதால், தரமான மருத்துவ சோதனைவசதிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் உதவுவதாக இருக்கும். நாட்டில் மருத்துவ சாதனங்களுக்கான சில்லரைசந்தை, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும். இதன் உலக சந்தை மதிப்பு சுமார் 15 லட்சம் கோடியாகும்.
இதில் இந்தியா மிகச்சிறிய பங்கு கூட வகிக்கவில்லை, மருத்துவ உபகரணம் இறக்குமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதைப்போன்ற உற்பத்தி பூங்காவை அமைப்பதன் மூலம் மருத்துவ உபகரண உற்பத்தியை எளிமை படுத்தலாம். பல சிறு நிறுவனங்கள் குறைவான செலவில் ஆராய்ச்சி மற்றும் விற்பனை பணிகளில் ஈடுபடுவது எளிதாகும். இந்தியாவில் போதுமான அறிவுசார் மனித சக்தி கொட்டிக் கிடப்பதால் இந்தியா உலகுக்கே மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் வல்லமையை பெரும்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |