பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல்

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் உயிரின வளர்ப்பு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.  இது மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பன்முக மீன்வளத்தை உள்ளடக்கியதாகும் .தரமான விதைகள் மற்றும் தீவன உற்பத்தி, அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பு, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பக் காப்பகம், அறிவு பரவலாக்கம், பொழுதுபோக்கு ஆகியவற்றின் மையமாக நீர்வாழ் உயிரின பூங்காக்கள் திகழ்கின்றன.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் (நிதியாண்டு 2020-21 முதல் நிதியாண்டு 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டு (நிதியாண்டு 2024-25) மொத்தம் ரூ.682.6 கோடி செலவில் மொத்தம் 11 ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின பூங்காக்களை அமைக்க மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீர்வாழ் உயிரின  பூங்காக்கள் தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் அமைக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் நீர்வாழ் உயிரின பூங்காவுக்கு ரூபாய் 127.71 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) தமிழ்நாட்டிற்கு ரூ.1156.15 கோடி மதிப்பிலான 48 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் மொத்த பங்களிப்பு ரூ.448.65 கோடியாகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்த பதிலை அளித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...