ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண்மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதாகும் பிரியங்காரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரதுஉடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்துகிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் கண்டறிந்துள்ளனர்.
பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தசம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ப்ரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்துபேசினார். ப்ரியங்காவின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதலை தெரிவித்தார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |