எங்கள் குடும்பம் வெளிப்படையானது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக தேசியசெயற்குழு கூட்டம் கடந்த சனி மற்றும் ஞாயிறுக் கிழமைகளில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கியபிரமுகர்கள் ஹைதராபாத் வந்திருந்தனர்.

இரண்டு நாள் நடைபெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடந்துவருகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும்சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தை நோட்டமிட்டு அங்கு புகைப்படங்களை எடுத்த தெலங்கானா மாநில உளவுத்துறை அதிகாரி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்கள் கட்சியில் எந்த ரகசியமும் இல்லை. நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. இதுஒன்றும் குடும்ப கட்சி அல்ல. இந்த சூழலில் அத்துமீறி எங்கள் கூட்டத்தில் அந்த நபர் நுழைந்துள்ளார். இருந்தாலும் எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும்இல்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்விற்கு தேவைப் பட்டால் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். ஆனால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அதைநோட்டமிடுவது தவறானது என்றார்.இந்த சம்பவம் தொடர்பாக மத்தியஅமைச்சர் பியூஷ் கோயலும், எங்கள் குடும்பம் வெளிப்படையானது. எனவே, எங்கள் நடவடிக்கையில் எந்தரகசியமும் இல்லை என்றுள்ளார். முன்னதாக கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று பட்ஜெட் தாக்கல்

இன்று பட்ஜெட் தாக்கல் பார்லிமென்டில் இன்று (பிப்.,01) பட்ஜெட்டை, முற்பகல் 11 மணிக்கு ...

வெளிநாட்டு சதி இல்லாத முதல் பார ...

வெளிநாட்டு சதி இல்லாத முதல் பார்லி கூட்டம் – பிரதமர்  மோடி பேச்சு ''கடந்த 10 ஆண்டுகளில் பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, ...

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம ...

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் : திட்டமிடும் பணி துவக்கம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் பணி ...

ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத ...

ஜனாதிபதி உரை பற்றிய சோனியா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் ''ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த ...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 ச ...

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ...

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற ...

தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு – கிஷன் ரெட்டி பிரதமர் மோடி தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...