அடுத்த ஐந்து ஆண்டு திட்ட காலத்தில் மின் உற்பத்தி திறனை கூடுதலாக 94,000 மெகா வாட்டுக்கும் அதிகமான அளவில் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான மின் உற்பத்தி திட்டங்களுடன், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட
மரபுசாரா எரிசக்தி திட்டங்களும் அடங்கும். மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் நீங்கலாக மின் உற்பத்தி திறன் 75,000 மெகா வாட் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் அனல்மின் உற்பத்தி திட்டங்களின் பங்களிப்பு 63,781 மெகா வாட்டாக இருக்கும். நீர்மின் திட்டங்களின் பங்கு 9,200 மெகா வாட்டாக இருக்கும் என்றும், அணுமின் திட்டங்களின் உற்பத்தி 2,800 மெகா வாட்டாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மின் உற்பத்தி திறன் கணிசமாக உயர்த்தப்பட உள்ள நிலையில் இத்துறையில் நிர்வாகிகள், பொறியாளர்கள் உள்பட தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக உள்ளன.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.