5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க படவுள்ளன

ஐந்துகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

ஹிந்தி செய்தி தொலைக் காட்சி செவ்வாய்க் கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிதின்கட்கரி கூறியதாவது:

பொருளாதாரத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. உள்கட்டமைப்பு வளா்ச்சி, கிராமப்புற வேளாண்மை, பழங்குடியின வளா்ச்சி ஆகியவற்றுக்கும் சமஅளவில் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்து வதற்காக விரிவான திட்டங்கள் உள்ளன.

நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 5 ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. வரும் மாா்ச்மாதம் ரூ.2 லட்சம் கோடியும், அடுத்த ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியும் திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும் சுமாா் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. அதில், 1.5 லட்சம்போ் உயிரிழக்கின்றனா்.

நாட்டில் 22 லட்சம் ஓட்டுநா்களுக்கு தேவை இருக்கிறது. 30 சதவீத ஓட்டுநா் உரிமம் போலியானவையாக உள்ளன என்றாா்.

மகாராஷ்டிர அரசியல் குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு, ‘அந்த மாநிலத்தில் மாறுபட்ட கொள்கைகளை கொண்டகட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. விரைவில் மகாராஷ்டிரத்தில் அந்தக்கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும்’ என்று பதிலளித்தாா் கட்கரி.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...