வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும்வகையில் அமிர்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது பட்ஜெட் இது. விளிம்புநிலை மற்றும் ஏழை மக்கள் கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சருக்கும், அவரது குழுவினருக்கும் பாராட்டு. நாட்டை கட்டமைப்பதில் பாரம்பரியமிக்க கலைவல்லுனர்களான கலைஞர்கள், தச்சர்கள், இரும்பு மற்றும் பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பக்கலைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

படைப்பாற்றலுடன் கடுமையாக பணியாற்றும் இத்தகைய கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும்வகையில் முதல் முறையாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கலைஞர்களுக்கான பயிற்சி, கடனுதவி மற்றும் சந்தைப் படுத்துதலுக்கான ஆதரவை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் பல்வேறுதுறை சார்ந்த கோடிக்கணக்கான கலைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள், பணியில் இருக்கும் மற்றும் இல்லத் தரசிகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் வகையில் ஜல்ஜீவன் இயக்கம், உஜ்வாலா திட்டம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அளப்பரிய செயல்களை செய்யும் வகையில் அவை மேலும் வலுப்படுத்தப்படும் . மகளிருக்கான, குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய சிறப்பு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதியபரிமாணத்தை வழங்க இந்த பட்ஜெட் வகை செய்கிறது.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க இந்தபட்ஜெட் வகை செய்கிறது. கூட்டுறவு துறையில் உலகின் மிகப் பெரிய உணவுசேமிப்புத் திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அரசின் முன்னோடி திட்டமான புதியமுதன்மை கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதற்கான அறிவிப்பு இந்தப்பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய கூட்டுறவு நிறுவனங்கள் பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு, வேளாண்மை, விவசாயிகள், கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர்கள் தங்களது பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

வேளாண் துறையில் டிஜிட்டல்கட்டண முறையை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதற்கென டிஜிட்டல் வேளாண் கட்டமைப்புக்கான மிகப்பெரிய திட்டம் இந்தப் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

உலகநாடுகள் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாடிவரும் வேளையில் இந்தியாவில் பல்வேறு வகையான சிறுதானியங்கள் பலபெயர்களில் உள்ளன. உலகெங்கிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சிறு தானியங்கள் சென்றடையும் வகையில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மிகச் சிறந்த உணவான சிறுதானிய உணவுகளுக்கு புதிய அடையாளத்தை அளிக்கும்வகையில் ஸ்ரீ-அன்ன திட்டம் செயல்படுத்தப்படும், இதன் மூலம் சிறு மற்றும் பழங்குடியின விவசாயிகள் பொருளாதார பயன் பாட்டை பெறும் வகையிலும், நாட்டில் உள்ள மக்களுக்கு சுகாதார வாழ்வை அளிக்கும் வகையிலும் இத்திட்டம் வகைசெய்யும்.

நீடித்த எதிர்காலத்திற்கு தேவையான பசுமை வளர்ச்சி, பசுமை பொருளாதாரம். பசுமை உள்கட்டமைப்பு மற்றும் பசுமை பணிகள் ஆகியவற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான அம்சங்கள் இந்தபட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. புதிய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் இடம் உள்ளன. எழுச்சிமிகு இந்தியாவை உருவாக்கும் வகையில் சாலை, ரயில், மெட்ரோ, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து போன்ற ஒவ்வொரு துறையிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான முதலீடு 400 சதவீதத்திற்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களை துரிதப்படுத்தவும், புதிய ஆற்றலை அளிக்கவும் வல்ல உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இத்தகைய முதலீடுகள் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் ஏராளமான மக்களுக்கு புதிய வருவாய் வாய்ப்புகளையும் வழங்கிடும்.

வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் வகையில், தொழில்துறை மறுசீரமைப்பு மற்றும் கடனுதவி திட்டங்களுக்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதல்கடன் உத்தரவாதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுமானத்தின் அடிப்படையில் செலுத்தப்படும் வரிக்கான உச்சவரம்பை அதிகரிப்பது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை குறித்த நேரத்தில் செலுத்துவதற்கான புதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047 ஆம் ஆண்டின் கனவுகளை நனவாக்கும் வகையில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும். நடுத்தரப் பிரிவு மக்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை மேற்கொண்டது. இதற்கென வரிகுறைப்பு, வருமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளில் எளிமை, வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. நடுத்தர பிரிவு மக்களுக்கு பெரிய அளவில் வரி நிவாரணம் வழங்குவது குறித்து மத்திய அரசு உணர்ந்துள்ளது.

நன்றி நரேந்திர மோடி
பாரத பிரதமர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...