2019ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அக்கட்சியின் அப்போதைய தலைவரான ராகுல்காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். ஆனால் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அரசியலில் கடின உழைப்பாளியான பிரதமர் மோடிக்கு இணையாக ஒருபோதும் வாய்ப்பில்லை என கேரளாவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற கேரளா இலக்கியவிழாவில் பேசிய குஹா, ‘சுதந்திர போராட்டத்தின் போது மிகப்பெரிய காங்கிரஸ் கட்சி ஒருகுடும்ப நிறுவனமாக மாறியதே, தற்போது இந்தியாவில் இந்துத்வாவும், போர்க் குணமும் தலைதூக்க காரணமாகும். ராகுல் காந்தி ஒரு கண்ணியமான மனிதர். தனிப்பட்ட முறையில் அவர்மீது எனக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை.
கேரள மக்களே, நீங்கள் இந்தியாவுக்காக பல அற்புதமான காரியங்களைச் செய்துள்ளீர்கள், ஆனால் நீங்கள்செய்த பேரழிவு காரியங்களில் ஒன்று ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது ஆகும். 2024ம் ஆண்டும் நீங்கள் ராகுல்காந்தியை தேர்ந்தெடுத்தால் அது பிரதமர் மோடிக்கே நன்மையாக முடியும். பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தை ஆண்டுள்ளார். ராகுலைப் போல விடுமுறையை கழிக்க ஐரோப்பா செல்பவர்அல்ல மோடி. மிகுந்த அரசியல் அனுபவம் உடைய பிரதமர் மோடிக்கு இணையாக ராகுல் காந்தி ஒருபோதும் வரமுடியாது.’ என கூறினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |