தில்லி ராஜபாதையில் நடைபெற்றுவரும் கைவினைப் பொருள்காட்சிக்கு திடீர்விசிட் அடித்த பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்த கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டார்.
தில்லி ராஜ பாதையில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் சாா்பில் ஏற்படுத்தப் பட்டுள்ள ‘ஹுனா் ஹாட்’ என்னும் கைவினை பொருள்காட்சி பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
‘கௌஷல் கோ காம்’ என்ற கைவினை உற்பத்தி நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள ‘ஹுனா் ஹாட்’ கண்காட்சி பிப்ரவரி 23-ஆம் தேதிவரை தில்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடுமுழுவதும் இருந்து பெண்கள் உள்பட மாஸ்டா் கைவினைஞா்கள், கைவினைஞா்கள் மற்றும் சமையல் நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா்.
சிறுபான்மையினா் விவகார அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்தகைவினை பொருள்காட்சி (ஹுனா் ஹாட்) ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இங்கு, சிறிய அளவிலான கைவினை கலைஞா்களும், தங்கள் கிராமங்களில் இருந்து தயாரித்து கொண்டுவரும் பொருள்களை சந்தைப்படுத்து வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது. மேலும் இது முக்கிய வேலைவாய்ப்பு மையமாகவே விளங்கி வருகிறது.
பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ள இந்த பொருள்காட்சிக்கு, நாள்தோறும் ஏராளமான பொது மக்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர். இவ்வளவு சிறப்புமிக்க பொருள்காட்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகைதந்து கைவினைக் கலைஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அங்கிருந்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும், அதுபற்றி கைவினை கலைஞர்களிடம் கேட்டறிந்தார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |