வடஇந்திய மாநிலங்களுக்கான சட்டபிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை, அதுபற்றி தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், வடஇந்திய மாநிலங்கள் அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் வெளியேவர வேண்டும் என்பதைத்தான் மோடி அரசு விரும்புகிறது. உதாரணமாக, பயங்கர வாதம், மாநில எல்லைப்பகுதிகளில் இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றை களையவே மோடி அரசு விரும்புகிறது.
2014 வரை, வடஇந்திய மாநிலங்கள், இந்தியாவுடன் வெறும் புவியியல் அமைப்பு ரீதியாக மட்டுமே இணைந்திருந்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு தான், வடஇந்திய மாநிலங்கள் இந்தியாவுடன் ஒன்றிணைக்கப்பட்டன.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் என ஒவ்வொரு கலாசாரசிறப்பம்சம் இருக்கும். அதன்படி, சட்டப்பிரிவு 371ன் கீழ் பல்வேறு மாநிலங்களும் தனித் தனியாக சிறப்பு அந்தஸ்துகளை பெறுகின்றன. இது, அந்தந்த மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. எனவே, சட்டப்பிரிவு 371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று அமித் ஷா கூறினார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |