நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய திலிருந்தே டெல்லியில் நடந்தவன்முறை சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பிவந்தனர். இந்நிலையில், நேற்று கூடிய அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றியதாவது . டெல்லியின் மற்ற பகுதிகளில் கலவரங்கள் பரவாமல் காவல்துறையினர் தடுத்தது பாராட்டுக்குரியது. வன்முறைச் சம்பவங்களை சுமார் 36 மணி நேரத்தில் காவலர்கள் கட்டுப்படுத்தியனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகைதந்தபோது எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளவில்லை. நாள் முழுவதும் காவல் துறையினருடன்தான் இருந்தேன். வன்முறைகள் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 2,600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
`இந்து மற்றும் இஸ்லாமியன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை’ இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடியுமா என்ன? காங்கிரஸினர் ஆட்சியின் போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரங்கள் நடைபெற வில்லை. இந்தச்சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது”
`குடியுரிமை திருத்தச் சட்டமானது முறையான கலந்துரை யாடலுக்குப் பிறகே ஜனநாயக முறையில் நிறைவேற்ற பட்டது. குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. துன்புறுத்தபடும் மக்களுக்குக் குடியுரிமை வழங்கு வதற்கான விதிமுறைகள் உள்ளன. எனக்கு மத அடிப்படையிலான 25 சட்டங்கள் தெரியும். இஸ்லாமியத்திற்கான சட்டங்கள் தெரியும். எனவே, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச்சட்டம்தான் முதல் சட்டம் எனக் கூறுவது தவறு. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணிகளைவிட ஆதரவு தெரிவித்து நடந்த பேரணிகளே அதிகம்” என்றார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |