போதிய மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்

கரோனா நோய் தொற்று பாதிப்புசூழலை எதிா்கொள்ளும் வகையில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கைசுவாசக் கருவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் போதியளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

நாட்டில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும், அதைச் செயல் படுத்துவதற்குமாக அதிகாரம் அளிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் அந்தக்குழுக்களின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது.

அந்தக் கூட்டம் தொடா்பாக பிரதமா் அலுவலகம் சனிக் கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா பாதிப்பை எதிா் கொள்வதில் நிலவும் தயாா்நிலையையும், மருத்துவமனைகள், தனிமைப் படுத்துவதற்கான இடவசதிகள் ஆகியவற்றின் போதிய இருப்பையும் பிரதமா் மோடி ஆய்வுசெய்தாா். அத்துடன், நோய் கண்காணிப்பு, பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளின் நிலவரங்கள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

அப்போது, தனி நபா் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் போதியளவு இருப்பையும், அவற்றின் தயாரிப்பு மற்றும் கொள்முதலையும் உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா் என்று அந்த சுட்டுரைப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனாபாதிப்பு சூழலில் சுகாதாரச் சேவைகளை அதிகரிப்பது, பொருளா தாரத்தை மீண்டும் சீரடையச் செய்வது, தேசிய ஊரடங்கு நிறைவுக்கு பிறகான தயாா் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக 11 குழுக்களை மத்தியஅரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.

இதில் 9 குழுக்களுக்கு செயலா் அளவிலான அதிகாரிகள் தலைமை வகிக்கும் நிலையில், எஞ்சிய இரு குழுக்களில் ஒன்றுக்கு நீதிஆயோக் தலைவரும், மற்றொன்றுக்கு நீதி ஆயோக் உறுப்பினா் ஒருவரும் தலைவா்களாக உள்ளனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...