வயநாட்டில் இந்திய விமானப்படையின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள்

கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவை அடுத்து, இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) முதல் பதிலளிப்பவராக ஜூலை 30 அதிகாலை முதல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்கள் முக்கியமான தளவாட பொருட்கள் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்துள்ளன. பெய்லி பாலம், நாய் படைகள், மருத்துவ உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பிற அத்தியாவசிய உபகரணங்கள் போன்ற 53 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை சி -17 விமானம் கொண்டு சென்றுள்ளது. மேலும், ஏஎன்-32 மற்றும் சி-130 ரக போர் விமானங்கள் நிவாரணப் பொருட்களையும், பணியாளர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய விமானப்படையின் இந்த விமானங்கள் ஒட்டுமொத்தமாக, மீட்புக் குழுக்கள் மற்றும் இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருநது கொண்டு செல்ல உதவியுள்ளன. சவாலான வானிலைக்கு இடையிலும் இந்திய விமானப்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பல்வேறு கடற்படை ஹெலிகாப்டர்களை விமானப்படை அனுப்பி வைத்துள்ளது. எம்ஐ-17, துருவ் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் (ஏஎல்எச்) ஆகியவை மீட்பு நடவடிக்கைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பரவலான மோசமான வானிலை இருந்தபோதிலும், சிக்கித் தவிக்கும் நபர்களை அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான மண்டலங்களுக்கு வெளியேற்றுவதற்கும், ஜூலை 31, மாலை வரை அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கும் ஐ.ஏ.எஃப் விமானங்கள் தொடர்ந்து உதவுகின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்களை விமானம் மூலம் மீட்டு, அவர்களின் பாதுகாப்புக்கும் உடனடி போக்குவரத்துக்கும் உறுதி செய்துள்ளன.

பேரிடரால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்திய விமானப்படை உறுதிபூண்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.