இது ஒரு நீண்ட காலப்போர். நாம் சோர்ந்து விடக் கூடாது

இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக் கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பாஜக துவங்கப்பட்ட 40வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ மூலமாக இன்று உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியது:

இந்தவருடம் ஒரு இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது. நமக்கு மட்டுமல்ல, மொத்த உலகுமே, அச்சுறுத்தலான காலகட்டத்தில் உள்ளது.

இந்ததொற்று நோய் தொடர்பான அபாயத்தை முதலில் நன்கு அறிந்துகொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களின் உதவிகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரிதகதியில் எடுக்கப்படுகிறது. நமது தடுப்பு நடவடிக்கையை, உலகசுகாதார நிறுவனமும்கூட பாராட்டியுள்ளது.

நாட்டுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். சுய ஊரடங்கு காலகட்டமாக இருக்கட்டும், இப்போதைய லாக்டவுனாக இருக்கட்டும், மக்கள் அரசுக்கு துணைநிற்கிறார்கள். இந்தியா மக்கள்தொகை அதிகம் உள்ள நாடு. இங்கு சமூக விலகலையும், அரசு கூறும் விதிமுறைகளையும், மக்கள் பின்பற்றுவது கடினம் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், இந்தியா சுயகட்டுப்பாட்டில், உலகத்திற்கே முன்னுதாரணமாக மாறியுள்ளது.

நான் வீட்டுக்குள் இருக்கலாம், ஆனால் எனக்காக மொத்தநாடும் போராடிக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் நினைவில் வைத்து கொண்டிருக்கிறான்.

இது ஒரு நீண்ட காலப்போர். எனவே நாம் சோர்ந்து விடக்கூடாது. கண்டிப்பாக வெற்றிபெற்றே தீருவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யும் பாஜக தொண்டர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிவது, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை நாட்டுக்கும் உங்களுக்கும் நலன்பயக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...