16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருகிறது

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், அதிகாலையில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சரக்குரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து, மிகுந்த வேதனையடைந்தேன் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், ரயில்விபத்து காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால், மிகுந்த வேதனையடைந்தேன்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசினேன். அவர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப் பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மகாராஷ்டி ராவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தண்டவாளம் வழியாக திரும்பிவந்து கொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்தவழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை 5:15 மணியளவில் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியிருந்தாலும் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கி யுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...