சீனாவை சத்தமில்லாமல் அடிக்கும் இந்தியா

சீனாவை சத்தமில்லாமல் இந்தியா அடித்து வருகிறது…லடாக் இந்திய சீனா எல்லையில் சீனா எல்லைக்குள் சீனா ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது.

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவ வரலாற்றில் முதல்முறையாக இந்திய போர் விமானம் இந்திய லடாக் எல்லையில் பறந்தது…

சீனாவின் வான்வெளி எல்லைக்குள் சீனா ராணுவ ஹெலிகாப்டர் பறந்துவிட்டு சென்று விட்டது…எச்சரிக்கை செய்யும் வகையில் இந்திய போர்விமானமும் சீனா இந்திய எல்லையில் பறந்து எச்சரிக்கை விடுத்துள்ளது…

இதற்கெல்லாம் காரணம் என்ன?…

இந்தியா சத்தமில்லாமல் சீனாவை அடித்து வருகிறது…

1) கொரோனா வைரஸ் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அந்த நிறுவனங்களை கையகப்படுத்த சீனா சதி செய்தது…

சீனாவின் சதியை முறியடிக்கும் வகையில் இந்திய எல்லை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் இந்திய பங்குச் சந்தையில் மத்திய அரசின் அனுமதியில்லாமல் 1 ரூபாய்கூட அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியாது என்று சட்டத்தை திருத்தம் கொண்டுவந்து விட்டது…

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதில் தரவில்லை என்பதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது

2) சீனாவிற்கு அடுத்த பயம்…பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் சேர்த்துள்ள வரை படத்தை ஏற்கனவே இந்திய அரசு வெளியிட்டுள்ளது…

தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதி வானிலை அறிக்கையை தினசரிவெளியிட்டு வருகிறது…

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை இந்தியா கண்டு கொள்ளவில்லை…இந்தப்பகுதியில் மற்றும் சீனா எல்லையில் ராணுவத்தை இந்திய ராணுவ படையினர், டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை அதிகரித்து உள்ளது. காஷ்மீர் எல்லையில் உத்திகள் குறித்து அஜீத்தோவல் முப்படை தளபதிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை விண்ணில் பறந்துகண்காணித்து வருகிறது…

ஏனெனில் கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் சேர்ந்து விட்டால் 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனாவின் கனவு திட்டமான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை முடிவுக்கு வந்துவிடும் என்று சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது…

பின்னர் பாரதப் பிரதமர் மோடியிடம் கெஞ்சிக்கேட்கும் நிலைக்கு ஜின்பிங் தள்ளப்படுவார்… அந்த நிலையில் சீனா ஆக்கிரமிப்பு செய்த அக்சய்சின் பகுதியில் இருந்து சீனா வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டும்…

3) WHO உலகசுகாதார நிறுவனத்தின் செயற்குழு தலைவராக வரும் 22 ந்தேதி இந்தியா தலைமை வகிக்கிறது…இதனால் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான இருந்த சீனா வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் ஆய்வுநடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரலாம் என்று சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது…

மேலும் அடுத்த ஆண்டு WHO இயக்குநர் ஜெனரல் ஆண்ட்ரஸ் ஓய்வுபெறும் நிலையில் அடுத்த WHO இயக்குநர் ஜெனரலாக எந்த நாடு வரவேண்டும் என்று முடிவு எடுக்கும் இடத்தில் WHO செயற்குழு தலைவராக இந்தியா இருக்கிறது சீனாவுக்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது…

இந்தியாவிடம் அடி வாங்கும் சீனா ஆத்திரமடைந்ததின் விளைவாக இந்த மே மாதம் 4 ந்தேதி சனிக்கிழமை வடக்கு சிக்கிம் எல்லையில் உள்ள நாகுலா பகுதியில் சீனா ராணுவ வீரர்கள் எல்லை பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்

150 க்கும் மேற்பட்ட இந்திய சீன வீரர்கள் தள்ளுமுள்ளு மற்றும் கை கலப்பில் ஈடுபட்டனர்… கடந்த 4 ஆண்டுகளாக இந்தப்பகுதியில் எந்த ஒரு எல்லை பிரச்சினையும் இல்லை

லடாக் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் உள்ள நல்லா என்ற இடத்தில் இந்த மே மாதம் 5, 6 தேதிகளில் மீண்டும் எல்லைப் பிரச்சினையை சீனா வீரர்கள் ஏற்படுத்தினார்கள்…

இந்த நல்லா பகுதி பான்காங் டிசோ ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள விரல் 5 பகுதி அருகே உள்ளது…

லடாக் பகுதியில் திடீரென சீனா வீரர்கள் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்த இந்திய வீரர்கள் சீனா வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்…

இந்தப் பகுதியில் ஏப்ரல் 27 ந் தேதி சீனா ராணுவவாகன நடமாட்டம் இருந்ததால் இந்திய வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…

இதில் 7 சீனா வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது… பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சீனா வீரர்கள் கலைந்து சென்றனர்…

சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் செல்வாக்கு என்னவென்று சீனாவுக்கு தெரியும். எந்தநேரத்தில் பிரதமர் மோடி எப்படி முடிவு எடுப்பார் என்பதை சீனா அதிபர் ஜின்பிங் கணிக்க முடியாது.

எனவே இந்தியாவை மிரட்டிப் பார்க்கும் வகையில் எல்லையில் பிரச்சினையை உருவாக்கி உள்ளது சீனா…

அதற்கு தக்கபதிலடியை இந்தியா சீனாவுக்கு தந்து உள்ளது…

வரும் காலங்களில் சீனா வீழ்ச்சி அடையும்…இந்தியதேசம் எழுச்சி பெறும்….

உஷா சங்கர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...