திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவுடனான எல்லைக்கு அருகில் மெகா அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து அரசு எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், பிரம்மபுத்திரா நதியில் பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. திபெத்தில் மேற்கொள்ளப்படும் பிரமாண்ட அணை கட்டும் திட்டத்தால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது’ என, சீனா விளக்கமளித்துள்ளது.
இது குறித்து உத்தரபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: முன்பு, சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது, உலக நாடுகள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது இந்தியா பேசும்போது, உன்னிப்பாக கவனிக்கிறது. இந்தியா இன்று ஒவ்வொரு அம்சத்திலும் முன்னேறி வருகிறது. முன்பு பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது.
இப்போது இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. வரும் இரண்டரை ஆண்டுகளில், முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்.
அரசியல் ஆதாயங்களைக் காட்டிலும் மாணவர்களின் வாழ்க்கையைப் பற்றி தான், பா. ஜ., அரசு அதிக அக்கறை காட்டுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் மிக அணை கட்டும் சீனாவின் திட்டம் குறித்து மத்திய அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |