சொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும்

உலகை உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா கொடிய நோயிலிருந்து நமது நாட்டை மீட்க கூடிய வகையில் நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும், தமிழகத்தினுடைய எடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்களும், தமிழக அரசும், அதேபோல பிற மாநிலங்களினுடைய முதல்வர்களும் திறம்பட செயல்பட்டு வருகின்றார்கள்.

மிக முக்கியமான காலகட்டத்தை நாம் கடந்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றோம். மூன்று முறை சுயகட்டுப்பாடோடு கூடிய விலகலை நாம் கடைபிடித்து வருகின்றோம்.

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய சொந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஏறக்குறைய 50 நாட்கள் அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு, தனிமைப்படுத்திக்கொண்டு இருந்த காரணத்தினாலும், சில பகுதிகளில் வேகமாக கொரோனா பரவக்கூடிய செய்திகள், அவர்களுடைய சொந்தங்களை, பெற்றோரை, மனைவி மக்களை, குடும்பத்தாரை சேரும் போது, எங்கே தன்னுடைய சொந்தத்திற்கும் இந்த பாதிப்பு வந்துவிடுமோ என்று சொந்த ஊரில் இருக்கும் அவர்கள் அச்சத்தில் இருக்கக்கூடிய காட்சியும், மற்றொருபுறம் பிழைப்புக்காக வேலைக்காக சென்றவர்கள் தங்கள் பகுதியில் பரவி வரும் நோய் தங்களை தாக்கிவிடும் என்கின்ற அச்சமும் மற்றொருபுறம் தங்கள் குடும்பத்தார் இருக்கும் தங்கள் சொந்த பகுதியில் இந்த நோயின் காரணமாக தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற அச்சமும் தொடர்ந்து ஏற்பட்ட காரணத்தினால் அவர்கள் தங்கள் சொந்த சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் விரும்புகிறார்கள்.

இதில் எந்த தவறும் கிடையாது. இது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயம். ஆனால் துரதிஷ்டவசமாக, உதாரணத்திற்கு சென்னை போன்ற பெருநகரங்கள், நகராட்சிகள், கொரோனா அதிகமாக பாதித்துள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், வேலைக்காக அங்கு சென்றவர்கள் தங்கள் சொந்த மாவட்டம், சொந்த ஊருக்கு செல்ல விரும்பி வரும்போது, வரவேற்க மனம் நிறைந்த ஆசை சொந்தங்களுக்கு இருந்தாலும் கூட, வருபவர் நோயை கொண்டு வந்து விடுவாரோ என்ற அச்சம் தங்களையும் அறியாமல் மேலோங்கி நின்று கொண்டிருக்கிறது. அது உண்மையும் கூட. ஊரே வரவேற்ற ஒரு மனிதனை பார்த்து ஊர் அச்சப்பட்டு, இவர் இப்போது வந்திருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுப்பியிருப்பது உண்மை. இது மனிதன், ஜாதி, மதம் என்றெல்லாம் இல்லை. இது பொதுவாக இருக்கும் நிலை.

ஒரு உதாரணம் சொல்கின்றேன். சென்னையில் இருந்து புறப்பட்டு இன்னொரு சொந்த மாவட்டத்திற்கு சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று வரக்கூடிய ஒரு மனிதர், அவரை வரவேற்பதற்கு உறவுகள் தயாராக இருந்து கொண்டிருக்கின்றன, அப்படி வரும்போது மாவட்டத்தின் எல்லையிலேயே அவர் தடுக்கப்பட்டு, கொரோனா தொற்று நோய் இருக்கிறதா என்பது பார்க்கப்படுகிறது. இது சரியாக ஒன்று. பாதிப்பு இல்லை என்று சொன்னால் 1 நாள் அல்லது 2 நாள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அதிலும் பாதிப்பும் இல்லை என்று சொன்னால் அவர் ஊருக்கு அனுப்பப்படுகிறார். சொந்தங்களோடு சேர அனுமதிக்கப்படுகின்றார்.

அது இல்லாமல் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொன்னால், தனிமைப் படுத்துவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுகிறார். 14 நாட்கள் அங்கே வைக்கப் படுகின்றார்.

தப்பி தவறி வரும்போது கொரோனா இல்லாமல் வந்த பின் அவருக்கு அந்த நோய் வந்து, அவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழல் ஏற்படுகின்றது என்று சொன்னால் அந்த ஊரை சேர்ந்த யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்கள் அத்தனை பேருக்கும் சோதனை நடத்தப்படுகிறது, அவர் மூலமாக தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களும் தனிமைப் படுத்தப் படுகிறார்கள், வருத்தப்படும் அளவுக்கு சூழ்நிலைகள் வருகின்றன.

இந்த நிலையை தவிர்ப்பதற்காக என்னுடைய யோசனையை தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நான் தெரிவிக்க கடமைப் பட்டிருக்கின்றேன். தமிழ்நாடு அரசாங்கம், சுகாதாரத் துறை, காவல் துறை, யாரெல்லாம் தங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும் என்று மனு செய்து அவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த தொற்று நோய் இருக்கிறதா என்பதை அவர்கள் இருக்கக்கூடிய பகுதி, உதாரணமாக சென்னையை சேர்ந்தவர் மதுரைக்கு வர வேண்டுமென்றால், கன்னியாகுமரிக்கு வரவேண்டும் என்று சொன்னால், விண்ணப்பித்த உடனடியாகவே அவர் பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்ட வேண்டும். நோய் தொற்று இல்லை என்று சொன்னால் அவர் தன்னுடைய பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதி கொடுக்கலாம், விதிமுறைகளுக்கு உட்பட்டு.

நோய் தொற்று இருக்குமானால் சென்னையிலேயே சிகிச்சை பெறக் கூடிய அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற வகையில் ஒருவர் அச்சுறுத்தப்படுகிறார், தன்னையுமறியாமல் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் உணர்கின்றார். இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்காக, விண்ணப்பத்தோடு கூடிய கொரோனா தொற்று சோதனைகள் அவர் எங்கிருந்து புறப்பட விரும்புகின்றாரோ அங்கேயே நடத்தப்படவேண்டும். அவர் பயணத்திற்கு புறப்பட்டு விட்டார் என்று சொன்னால் தடையற்ற வகையில் தன்னுடைய ஊருக்கு செல்ல கூடிய அளவுக்கு கவனிக்க வேண்டும். அவர் தன்னுடைய மாவட்டத்திற்கு செல்லும் போது சோதனை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் ஏற்கனவே அவருக்கு நோய் தோற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அவர் பயணிக்கும் நேரத்தில் ஒரு வேளை அவருக்கு நோய் தோற்று வந்திருக்கும் என்று சொன்னால் அவரை தனிமைப்படுத்துவது தவறு அல்ல.

ஆகவே இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும், முதல் சோதனை புறப்படும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு அவருக்கு நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுக்க பட்ட பின்பு தான் அவர் புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும், மற்றொன்று அவர் பயணித்த நேரத்தில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என தெரிந்துகொள்ள அவர் சென்ற மாவட்டத்தில் சோதனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

பொன் ராதாகிருஷ்ணன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...