வர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா?

பட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்டடுன் வரைந்து கிண்டல் செய்தார்.

இதையடுத்து விசிகவினர் வழக்கம்போல அவர் முகநூல் பக்கத்தில் அர்ச்சனை செய்தனர். திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.

இன்று மதியம் நம் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அழைத்து வர்மாவைக் கைது செய்யும் முயற்சி நடப்பதாகவும் அதையொட்டி விழுப்புரம் மாவட்ட SPயிடம் பேசியதாகவும் தெரிவித்தார். SP கைது செய்யும் முடிவில் இருப்பதையும் தெரிவித்தார்.

நானும் மதியம் SPயிடம் பேசினேன். விசிக, திமுக அழுத்தம் என்று சொன்னார்.

பின்னர் நம் அண்ணன் H ராஜாவை அழைத்து விஷயத்தை சொன்னேன். 10நிமிடத்தில் திரும்பி கூப்பிடுவதாக சொன்னார். பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டேன். வர்மா இன்று இரவு வீட்டில் தான் தூங்குவார். கவலை வேண்டாம் என்றார்.

நக்கீரன் கோபால் மீது எந்தெந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப் பட்டு மாலை விடப்பட்டாரோ அதே பிரிவில் தான் வர்மாவும் கைது செய்யப்பட்டார். ஹிந்து ராம் எப்படி தலையிட்டாரோ அதே போல் தான் ராஜா அண்ணும் தலையிட்டு பேசியுள்ளார்.

மாலை 6மணியளவில் வர்மாவை விழுப்புரம் town காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கே நம் RSS BJP இந்து முன்னணி சகோதர்கள் நேரில் சென்றனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவரை வர்மா வீட்டிற்கு இளங்கோ ஜி அனுப்பி நிலமையை தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தார்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஓசூர் அண்ணன் நரேந்திரனும், நண்பர் K T ராகவனும் இரவு ஏழு மணியளவில் தயாநிதி மாறன் கைதை வலியுறுத்தி DGPயை சந்திக்கச் செல்வதாக தகவல் கிடைத்தது. விஷயத்தை KTRடம் சொன்னேன். இருவரும் DGpயிடம் பேசியுள்ளனர்.

பின்னர் என்னை அழைத்த KTR வர்மா ஜெயிலுக்கு போக மாட்டார் என்றார்.

இரவு சுமார் 11மணியளவில் ஓவியர் வர்மா தன் வீட்டிற்கு திரும்பி சென்றார்.

வர்மாவிடம் பேசிவிட்டு தர்ம போராளி ராஜா அண்ணனும் என்னை போனில் தொடர்பு கொண்டு வர்மா விடுவிக்கப் பட்டதை தெரிவித்தார்.

வர்மாவை சிறைக்கு அனுப்பும் முயற்சிக்கு முதல் சம்மட்டி அடி கொடுத்த தர்ம போராளி ராஜா அண்ணனுக்கும்,

பாஜக மாநில பொது செயலாளர் அண்ணன் நரேந்திரன் மற்றும் பாஜக மாநில செயலாளர் KTR க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த விஷயத்தை ஆரம்பம் முதல் கையிலெடுத்து, தகவல் தெரிவித்து, விடாமல் போனில் பேசி follow up செய்த அஸ்வத்தாமன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

வர்மா ஒன்றும் BJP RSS காரர் இல்லை. இருப்பினும் அவர் பக்கம் நாம் நிற்க நம் சித்தாந்த எதிரிகளே காரணம்.

திருமாவிற்கு ஆதரவாக ஜவஹருல்லா அறிக்கை விட்டார். காரணம் தலித் பாசம் அல்ல. வர்மா போட்ட வேறொரு கார்டடுனுக்கு வஞ்சம் தீர்க்க தருணம் பார்த்தார் ஜவஹருல்லா.

லயோலா கல்லூரியில் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் விமர்சித்து படம் வரைந்து கண்காட்சி நடத்திய மதவெறிக் கூட்டம் “இது எங்கள் கருத்து சுதந்திரம்” என்றது.

அப்போது இவர்கள் யாராவது கண்டித்தார்களா? மாறாக கருத்துரிமை என்றார்கள்.

அதே கருத்து சுதந்திரம் தின தந்தியில் கார்ட்டூன் போட்ட மதிக்கு கிடையாதா?

பட்டியலின மக்களை திமுக தொடர்ந்து இழிவு படுத்தி வருகிறது. தன்னை பட்டிலின மக்களின் தலைவனாக சொல்லிக் கொள்ளும் திருமா திமுகவைக் கண்டிக்காமல் பூசி மெழுகுவதை விமர்சிக்க வர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா?.

நன்றி ஓம்பலியூர் ஜெயராமன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...