ரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும்

நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

* ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டி 4.40 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* வங்கிகளிடம் இருந்து ரிசர்வ்வங்கி பெறும் டெபாசிட்டிற்கான வட்டி 3.75 சதவீதத்தில் இருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கிகள் குறைந்த வட்டியில் தாராளமாக கடன் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

* ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடன்தவணை செலுத்துவதற்கான சலுகைக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதாவது ஆக.31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தவணையை செலுத்தலாம்.
இது கிராம, நகர, கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

அத்துடன் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதிகடன் நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவற்றில் கடன் வாங்கியோரும் இத்திட்டத்தில் பயனடையலாம்.நிறுவனங்களின் நடைமுறை மூலதனதேவைக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசமும் ஆக.31 வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தச் சலுகை காலத்திற்கான வட்டி தனிக்கணக்கின் கீழ் வைக்கப்பட்டு நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வசூலிக்கப்படும்.கொரோனா தாக்கம் காரணமாக பங்கு மற்றும் கடன் பத்திர சந்தைகளில் நிலையற்றசூழல் காணப்படுகிறது. அதனால் பல நிறுவனங்கள் பங்குகள் கடன்பத்திரங்கள் ஆகியவற்றை வெளியிட்டு நிதி திரட்ட முடியாத நிலை உள்ளது.இதையொட்டி தகுதியுள்ள மூலதனத்தை கொண்டுள்ள வங்கிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும்.

நிறுவனங்களின் குழுவுக்கு ஒருமுறை வழங்கப்படும் கடனுக்கான வரம்பு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.ஜூன் 30 வரை இத்திட்டம் அமலில்இருக்கும்.பணவீக்கம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. கொரோனாவால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இதை வரவேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும் வகையில் ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள் உள்ளன. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு உதவும்வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. பொது முடக்கம் அமலில் உள்ளபோதும், நிறைவடைந்த பிறகும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு இந்தஅறிவிப்புகள் உதவும்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு இக்கட்டான சூழலை எதிா்கொண்டுள்ள நிலையிலும் பொருளாதாரத்தை சரியானபாதைக்கு எடுத்துச்செல்ல ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத்தக்கது. ரிசா்வ் வங்கியிலிருந்து மற்ற வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடன்களுக்கான மாத தவணைகளை ஆகஸ்டு மாதம்வரை நிறுத்தி வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடன் பெற்றுள்ள வா்களுக்கு பெரும் பலனளிக்கும் என்று தனது பதிவுகளில் ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...