சிங்கம்பட்டி ஜமீன் மறைவு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள்

சிங்கம்பட்டி மன்னர் டி.என்.எஸ். முருகதாஸ் தீரத்தபதி மறைவுக்கு அஞ்சலி –
அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டுகோள். மன்னர் ஆட்சி முறையில் இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி மன்னர்,

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிங்கம்பட்டி ஜமீன் அரசர்.விடுதலைக்குப் போராடிய வீரப்  பேரரசி வேலுநாச்சியார், மற்றும்  விவேகானந்த சுவாமியை சிக்காகோ அனுப்பிய இராமநாதபுரம் மன்னர்  பாஸ்கர சேதுபதி ஆகியோருகு நேரடி உறவுக்காரர். ராமேஸ்வரம் கடல் பகுதியை காக்கும் பொறுப்பு ராமநாதபுரம் ராஜாவுக்கு உண்டு. அதனால் அவர் சேதுபதி. அதுபோல தாமிரபரணி ஆற்றின் புனிதத் தலங்களை காக்கும் இவர் தீர்த்தபதி.

அரும்பெரும் சிந்தனையாளர், கொடையாளர்,  மிகுந்த ஆங்கிலப் புலமை மிக்கவர்,
தமிழுக்கும் சைவத்துக்கும் பாடுபட்டவர், அனைத்து ஆன்மீக சமூக
இயக்கங்களுக்கும் துணை நின்றவர், இங்கிலாந்தில் பயின்றவர். மேற்கு தொடர்ச்சி
மலையின் 80ஆயிரம் ஏக்கர் பரப்பளவு  நிலத்திற்கு உரிமையாளர்.பல இலட்சம் மக்கள் கூடும் பாபநாசம்  சொரிமுத்து அய்யனார் கோவிலின் பரம்பரை அறங்காவலர், சாதி,மத , இன வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்தும் அன்புடன் பழகி வந்தவர். அன்னாரின் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் கடைசி மன்னர் என்ற முறையில் அவரது இறுதிச் சடங்கை அரசு
மரியாதையோடு நடத்த வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை
வைக்கிறேன்.

என்றும் தேசப் பணியில்
Dr.L.முருகன்

மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...