தற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்

மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி மூலம் தொழில்வர்த்தக கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த சங்கங்களைச் சேர்ந்த வர்களுடன் அமைச்சர் இது போல ஆய்வு நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். கோவிட் -19 முடக்க நிலை அமலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதன்தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி மதிப்பீடுசெய்யவும், பொருளாதாரத்தை மீண்டும் நிலைப் படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

கூட்டத்தில்பேசிய கோயல், நாம் தேர்வு செய்வதைப் பொருத்து தான் எதிர்காலம் இருக்கும் . கோவிட் தாக்கம் முடிந்தபிறகு உருவாகும் சூழ்நிலையை சந்திக்க, நல்ல திட்ட யோசனைகள், உறுதியான அமலாக்க திட்டங்களுடன் தயாராக இருந்து, பணிகளைத்தொடங்கி இந்தியாவை உலகின் வல்லமையான நாடாக்க வேண்டும்

‘Jaan Bhi, jahan bhi’ என்ற பிரதமரின் சொல்லாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தின் மிகமோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. நிலைமைகள் சீரடையத் தொடங்கியுள்ளன. மீட்டுருவாக்கம் நடைபெற்றுவருகிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பொருளாதார சவாலை இந்ததேசம் சந்திக்க முடியும்.உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது . நாட்டின் அனைத்துதரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்து பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்புநிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும் .

தாராளமயமாக்கலின் முப்பது ஆண்டு காலங்களில் நாடு முன்னேறியுள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அங்கிருந்து பலகோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார்.

தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா முழுக்க 130 கோடி மக்களும் ஒரேமாதிரி உணர்வை பெறுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு அது உதவிசெய்யும். சாதாரண பயன்பாட்டில் உள்ள டேபிள், நாற்காலி போன்ற பொருள்கள், பொம்மைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களைகூட நாம் இறக்குமதி செய்வது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

நாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில் திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது , இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...