சர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது

சர்வதேச தூயமின்சக்தி சந்தையில் இந்தியா அதிகம் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரெவா பகுதியில் 750 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சோலார் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இன்று மட்டுமல்ல 21ம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய திறன் சோலார் சக்திக்கு உண்டு. சோலார் மின் சக்தி நிச்சயமாக தூய்மையான, பாதுகாப்பான மின்சாரமாக இருக்கிறது. உலகின் ஐந்து மிகப் பெரிய சோலார் மின் சக்தி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. ரெவா சோலார் ஆலை மத்திய பிரதேசத்திற்கு மட்டுமல்லாமல் டெல்லி மெட்ரோவுக்கும் மின் சாரம் விநியோகிக்கும்.

சர்வதேச அளவில் சோலார் மின் சக்தி துறையில் இந்தியா அதிகளவில் ஈர்க்கப்படும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தூய்மையான, விலைகுறைவான மின்சக்தி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஒருமுன்னணி மையமாக உருவெடுக்கும்

ரெவா இன்று வரலாற்றில் சாதனை படைத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி ஆலையை ரெவாபெற்றிருக்கிறது. இதற்காக மத்தியப் பிரதேச, ரெவா மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தசாப்தத்தில் ரெவாவை மின்சக்தி மையமாக உருமாற்றுவதற்கு இந்த ஆலை உதவும்” என்று தெரிவித்தார்.

இந்த காணொளிக் காட்சி சந்திப்பில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய மின் சக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் பங்கேற்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...