பாபர் மசூதி இடிப்புவழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள பாஜக தலைவர்களுள் ஒருவரான உமாபாரதி, ஒருவேளை நான் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப் பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம் என அதிரடியாக பேசியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பாபர்மசூதி இடிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தினை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்புவாயிலாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கிலிருந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்பளித்திருந்தது. பின்னர் இந்ததீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றி, விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி மீண்டும் வழக்கை உயிர்பித்தது. இந்த வழக்கை மறுவிசாரணையாக தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றம் இந்தவழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31 க்குள் வழங்க வேண்டும்.ஆகையால் இந்த வழக்கு விரைவாக நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவார், “ராமர் கோயிலைக் கட்டினால் கொரோனா போய் விடும் என சிலர் கருதுகின்றனர்.” என்று விமர்சனம் செய்திருந்தார்.இது குறித்து உமாபாரதி கருத்து தெரிவிக்கயைில் “இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒருமுழு அமைப்பும் கொரோனா உடன் போராடுகிறார்கள். சுகாதார அமைப்பு தனி, கோயிலை கட்டியெழுப்பும் அமைப்புதனி. சரத்பவாரின் கருத்துகளில் நான்வேறு அர்த்தத்தைக் காண்கிறேன். சிலர் இவை அனைத்தும் அதிகபிரச்சனை இல்லாமல் நடக்கிறது என்று கவலைப்படுகிறார்கள். மோடி-ஜி அயோத்தியில் இருக்கும் போது ‘ஸ்ரீ ராம் ஜெய் ராம்’ பாடுமாறு பவார்-ஜியை நான் கேட்க விரும்புகிறேன்.” என உமாபாரதி தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |