“பலரும் வெள்ளைக்கார நீதிபதிகள்” மனநிலையில் இருக்கும்போது, இப்படியும் ஒரு நீதிபதியா? என வியக்க வைத்த மாண்புமிகு நீதிபதி,
வாழ்க..! நீதித்துறை..!
நீதித்துறையின் மணிமகுடம்..!
ஒரு நீதிபதியின் கடிதம் : வாசியுங்கள்
04-07-2022
” அன்பான வழக்கறிஞர்களே,
ஓரிரு நாட்களுக்கு முன், எனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம் அவ்வழக்கை 4.00 மணிக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அந்த வழக்கறிஞர் சற்று தயக்கத்தோடு ” நான்கு மணிக்கு வேண்டாம்… தயவுகூர்ந்து நாளை விசாரியுங்கள்” என்றார். ஆச்சரியமடைந்த நான் இன்று 4.00 மணிக்கே அவ்வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன். அதற்கு அவர் ” 3.30 மணிக்கு எனது குழந்தையை நான் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும், எனவே நீங்கள் 4 மணிக்கு வழக்கை எடுத்தால் எனக்கு தோதாக இருக்காது என்றார். அவரது சூழலை முழுமையாக உணர்ந்த நான் அவரது வேண்டுகோளுக்கு இணங்கினேன்.
இந்த நிகழ்வு எனது சிந்தனையை மேலும் ஆழமாகத் தூண்டியது.
என்னுடைய நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான பல இளம் தாய்மார்களும் பிராக்டீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கும் இதே போல் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களையும் சிரமங்களின்றி எனது நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதிப்பது எனது கடமை என்று உணர்கிறேன்.
எனவே அத்தகைய இளம் வழக்கறிஞர்கள் தங்களது வசதியான நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து அந்த நேரத்தில் எனது நீதிமன்றத்தில் அவர்களது வழக்கை நடத்தலாம். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இப்படிக்கு,
நீதிபதி. G.R.சுவாமிநாதன்
தமிழ் மொழி பெயர்த்த வழக்கறிஞருக்கு நன்றிகள்..!
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |