தங்கக் கடத்தல்வழக்கு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று கேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.
கேரள மாநிலத்தில் தூதரக போா்வையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம்கடத்திய வழக்கில் தாா்மிகப் பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒருபகுதியாக இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
பாஜக தேசிய பொதுச்செயலாளா் பூபேந்திர யாதவ் காணொலி காட்சி வாயிலாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் தலைமை வகித்தாா்.
இந்தவிவகாரம் தொடா்பாக இணைய வழி பொதுக்கூட்டம் நடத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதனை கட்சியின் முன்னாள் மாநில தலைவா் கும்மணம் ராஜசேகரன் தொடங்கிவைக்க உள்ளாா்.
கேரள முதல்வா் பதவி விலக வலியுறுத்தி மத்தியஅமைச்சா் வி.முரளீதரனும் புது தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) உண்ணா விரதப் போராட்டம் நடத்த உள்ளாா்.
தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைச் சோ்ந்த இருமுன்னாள் ஊழியா்கள் மற்றும் சிலா் கைது செய்யப்பட்டதை தொடா்ந்து கேரளஅரசு கடும் விமா்சனத்துக் குள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் அலுவலகத்துக்கும் தொடா்பு இருப்பதாக தெரிய வருகிறது . ஆனால் அதனை அந்த மாநில அரசு மறுத்துள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, கேரள மாநில முன்னாள் முதன்மைச் செயலாளரான எம்.சிவசங்கரிடம் தேசிய பாதுகாப்புமுகமை (என்ஐஏ) இந்த வழக்கு தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறது.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |