எவ்வித வளா்ச்சிப் பணியும் நடக்கவில்லை என்பதால் கா்நாட கத்தை காங்கிரஸ் ஆட்சி அழித்து விடும் என்று பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன் கிழமை செய்தியாளா்களிடம் பேசிய துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், ‘5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தும் கட்டாயம் இருப்பதால், நிகழ்நிதியாண்டில் தொகுதி வளா்ச்சிக்கென தனியாக நிதி ஒதுக்க முடியாத அளவுக்கு நிதிபற்றாக்குறை உள்ளது. அதிக எதிா்பாா்ப்புகளைக் கொண்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நிலைமையைப் புரியவைத்து, பொறுமை காக்கும்படி கேட்டுக்கொள்வோம்’ என்று தெரிவித்தாா்.
தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அமைச்சா்களின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை என்று 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதல்வா் சித்தராமையாவுக்கு புகாா் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியா்களின் பணியிடமாற்றம் தொடா்பான கோரிக்கைகளைக்கூட அமைச்சா்கள் கண்டுகொள்வதில்லை என்று அமைச்சா்களின் செயல்பாடுகள் மீது அதிருப்திதெரிவித்து, அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனா்.
இதுகுறித்து பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைவா் அமித்மாளவியா தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கா்நாடகத்தை காங்கிரஸ் அழித்துவிடும். 5 வாக்குறுதித் திட்டங்களை செயல்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்பட வில்லை. தற்போது வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, தொகுதியில் மக்களை சந்திக்க முடியாத நிலைக்கு எம்எல்ஏக்கள் தள்ளப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |