தமிழகத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதிவழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில்சந்தித்து கோரிக்கை விடுத்தார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
கொரோனா நோய் பரவலை கருத்தில்கொண்டு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, ஊர்வலம் செல்வது போன்றவற்றுக்குத் தடைவிதிப்பதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அந்த அறிக்கையில் தமிழகஅரசு கேட்டுக்கொண்டது. இதனிடையே தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவுவோம் என்று பல இந்து அமைப்புகள் பல அறிவித்துள்ளன.
இந்தபரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை நேரில்சென்று சந்தித்தார் பாஜக மாநில தலைவர் முருகன்.
சுமார் அரை மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதற்குப்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் விநாயகர் சிலைகளை நிறுவி அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கவேண்டும், என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
விநாயகர் சிலையை நிறுவுவதற்கும், வழிபடுவதற்கும் அனுமதி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். கோவில்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கோவில்வளாகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டு, பின்னர் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கலாம் என்பது எனதுதரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனை. இவ்வாறு முருகன் தெரிவித்தார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |