உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை

நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்துமூலம் பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர், நரேந்திர சிங் தோமர், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா என்னும்திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பான நீர்பாசனத்தை வழங்குவதற்காகவும், ஒரு சொட்டு தண்ணீரில் அதிகவிளைச்சலை (பி எம் டி சி) உறுதி செய்வதற்காகவும், பெரிதும் விரும்பப்படும் ஊரக செழிப்பை உருவாக்குவதற்காகவும் 2015-16-இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்ததிட்டத்தின் கீழ் 2017-18-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2819.49 கோடி வழங்கப்பட்டு, 10.48 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டுநீர் பாசனத்தில் பயன்பெற்றன. 2018-19-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2818.38 கோடி வழங்கப்பட்டு, 11.58 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டுநீர் பாசனத்தில் பயன்பெற்றன. 2019-20-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2700.01 கோடி வழங்கப்பட்டு, 11.72 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டுநீர் பாசனத்தில் பயன்பெற்றன.

விவசாயம் மாநிலங்கள் பட்டியலில் இருந்தாலும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கா மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

மண்வள அட்டை திட்டத்தின்கீழ் 2015-16-இல் ரூ 200 கோடியும், 2016-17-இல் ரூ 368.30 கோடியும், 2017-18-இல் ரூ 458.76 கோடியும், 2018-19-இல் ரூ 384.19 கோடியும், 2019-20-இல் ரூ 333.95 கோடியும் ஒதுக்கப்பட்டது.

வேளாண்துறை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 2014-15-இல் ரூ 208.3 கோடியும், 2015-16-இல் ரூ 177.85 கோடியும், 2016-17-இல் ரூ 180 கோடியும், 2017-18-இல் ரூ 577.58 கோடியும், 2018-19-இல் ரூ 1200 கோடியும், 2019-20-இல் ரூ 1033.34 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2020-21-இல் இதுவரை ரூ 1033.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காய்கறி சமையல் எண்ணெய்கள், பருப்புகள், பண்ணை பசுமை பழங்கள், பச்சை முந்திரி கொட்டைகள், பருத்தி மற்றும் வாசனைப் பொருட்கள் போன்ற முக்கிய வேளண் பொருட்கள் நமது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த வேளாண் இறக்குமதியில் மேற்கண்ட பொருட்கள் 84 சதவீதம் பங்கை வகிக்கின்றன.

வேளாண் பொருட்களை பொருத்தவரை உபரியாகவே இந்தியாவில் உற்பத்தி செய்ப்படுகின்றன. உற்பத்தியை இன்னும் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அழுகக் கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக 8186 குளிர்பன மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. இவற்றில் 374.25 லட்சம் மெட்ரிக் டன்கள் பொருட்களை சேமிக்கலாம்.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சிதிட்டம், பிரதமரின் விவசாயிகள் சம்பதா திட்டம் போன்றவற்றின் மூலம் குளிர்பதன வசதிகளை ஊக்குவிப் பதற்காகவும், பெருக்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரிப், ராபி மற்றும் இதர வணிக பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவுவிலையை அரசு உயர்த்தி உள்ளது. உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிகமாக கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் விலைகள் உயர்த்தப்பட்டன.

தேசிய கிரிஷி விகாஸ் திட்டத்தின் கீழ், புதுமைகள் மற்றும் வேளாண்தொழில் முனைவோர் வளர்ச்சி” என்னும் நடவடிக்கையை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தியுள்ளது.

வேளாண் மற்றும் அதைசார்ந்த துறைகளில் செயல்படும் 346 புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) நிதி உதவிக்காக ரூ 36.72 கோடி நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்க பட்டுள்ளன.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...