நாட்டிலுள்ள அனைத்து கிராமபஞ்சாயத்து தலைவர்களையும் 2020 செப்டம்பர் 29 தேதியிட்ட கடிதம் ஒன்றின் மூலம் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜல்ஜீவன் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்து வதற்கான அவர்களது முயற்சிகளை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய்மூலம் தண்ணீர் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். மக்கள் அளித்தபங்களிப்பு எவ்வாறு இந்தத் திட்டத்தை வெற்றியடைய செய்துள்ளது என்பதை குறித்து பிரதமர் தனது கடிதத்தில் விளக்கியுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோக பிரச்சினை மட்டும் தீராது, காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்ட் போன்ற நீரினால்பரவும் நோய்களும் கட்டுப்படுத்தப்படும் என்று கூறிய பிரதமர், தூய்மையான தண்ணீரை கால்நடைகளுக்கும் கொடுப்பதன் மூலம் அவற்றின் ஆரோக்கியம்மேம்பட்டு, உற்பத்தி திறன்அதிகமாகி, குடும்பங்களின் வருமானமும் உயரும் என்றார்.
ஜல் ஜீவன் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு கிராம பஞ்சாயத்துகளை பிரதமர் கேட்டுக் கொண்டார். நாடு கொரோனாவுடன் போராடும் காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம், தற்சார்பு இந்தியாவை நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
தண்ணீர் பற்றக்குறை பெண்களையும், குழந்தைகளையும் எவ்வாறுபாதிக்கிறது என்பது பற்றி தனது கடித்தத்தில் பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார். ‘ஏழைகள் நல வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேறுள்ள பிரதமர், கொரோனா வைரஸ்தொற்றில் இருந்து தங்களது கிராமங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். அனைவரும் நல்ல ஆரோக்கி யத்தையும், பாதுகாப்பையும் பெற பிரதமர் வாழ்த்தினார்.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |