78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரை வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதிபலிப்பு -அமித் ஷா

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு, நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பு என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “78-வதுசுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிலிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தற்சார்பு, ஒரே நாடு-ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், மருத்துவக் கல்வி விரிவாக்கம், தொழில்துறை உற்பத்தி மற்றும் ‘இந்தியாவில் வடிவமைப்பு’ மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற கருப்பொருள்களை எடுத்துரைத்த மோடியின் உரை, கடந்த 10 ஆண்டுகளின் வெற்றிகளால் ஈர்க்கப்பட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலித்தது. இந்த உரையைக் கேட்டு, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். ”

“பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உரை, அடிவானத்தில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய பரந்த பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதை அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் சக்தியை இந்தியாவிற்கு ஏற்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பாடத்திட்டங்களை திருத்துவதன் மூலம் சுய மாற்றத்திற்கான பயணத்தை இந்தியா வகுத்துள்ளது. இது குடிமக்களால் இயக்கப்படும் நிர்வாகத்துடன் கூடிய புதிய இந்தியா. 140 கோடி குடிமக்களும் நிச்சயமாக மகத்துவம், செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று உறுதியாக நம்பும் புதிய இந்தியா இது என்று திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...