வறுமை நிலையை குறைப்பதற்கான உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, பிரதமரின் கிராமப் புறச் சாலைகள் திட்டத்தை 2000 டிசம்பர் 25 அன்று மத்திய நிதியுத வியுடன் கூடிய திட்டமாக அறிவித்தது. இத்திட்டம் மக்கள் தொகை அடிப்படையில் (சமவெளிப் பகுதிகளில் 500+ மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 250+) சாலை வசதிகள் இல்லாத கிராமப் புறங்களுக்கு அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற வகையில் சாலைகளை அமைப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் போக்கு வரத்துக்கான இணைப்பை வழங்க வகை செய்கிறது.
இமய மலையை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சில சிறப்பு பகுதிகள்) கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 நபர்கள் அல்லது அதற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 50,000 கி.மீ நீளத்திலான கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் இலக்குடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப் பட்டது.
இத்திட்டம் குறித்து நிதி ஆயோக், இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத், உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை நடத்திய பல்வேறு மதிப்பீட்டு ஆய்வுகள், கல்வி, சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தி யுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |