பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில், மாற்றுவழியில் மேற்கொள்ளப்படவுள்ள கொல்கத்தா கிழக்கு-மேற்கு ரயில்பாதை பணிக்கான தொகையை உயர்த்தி ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வியூகங்களும் இலக்குகளும்:
• ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான கொல்கத்தா மெட்ரோரயில் நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
• மொத்தம் 8575 கோடி செலவில் இந்ததிட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3268.27 கோடி ரூபாயை ரயில்வே அமைச்சகமும், 1148.31 கோடி ரூபாயை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகமும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனமான ஜேசிஐஏ-யின் கடன் தொகையான 4558.40 கோடி ரூபாயும் அடங்கும்.
• 5.3 கிலோ மீட்டர் தூர உயர்த்தப்பட்ட ரயில்பாதை, இந்த வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
• மேலும் 1.67 கிலோமீட்டர் வரையிலான ரயில்பாதையில் இந்த மாதம் 5-ஆம் தேதி ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
• 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்தை நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பெரும் மாற்றங்கள்:
வர்த்தக மாவட்டமான கொல்கத்தாவின் மேற்கே உள்ள தொழில்நகரமான ஹவுராவில் இருந்து கிழக்கே உள்ள சால்ட் லேக்நகரம் வரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் பயணம் செய்ய இந்தத் திட்டம் ஏதுவாக இருக்கும். மேலும் இந்த ரயில்பாதைத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், ஏராளமான மக்கள் சுகாதாரமான முறையில் பயணிக்கமுடியும். இந்த ரயில் பாதைத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், கொல்கத்தாவில் குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, தரமான போக்குவரத்து நடைமுறைக்குவரும். மேலும் இந்தத் திட்டத்தால் கொல்கத்தாவின் போக்குவரத்து பிரச்சினைகள் பெருமளவு தீர்க்கப்படுவதுடன், பயணநேரம் குறைவதால், நகரத்தின் உற்பத்தி பெருகும்.
மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்தை ஒன்றிணைக்கும் வகையில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சுமூகமான மற்றும் தடையில்லா போக்குவரத்து சேவை வழங்கப்படும்.
திட்டத்தின் பயன்கள்:
• மாசற்ற, சுகாதாரமான தரமான போக்குவரத்து வசதியை பயணிகள் பெறுவர்.
• பயணநேரம் குறையும்.
• எரிபொருளின் பயன்பாடு குறையும்.
• சாலை உள்கட்டமைப்பு செலவுகள் குறையும்
• விபத்துகளும் மாசும் குறையும்
• வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
• ஆத்ம நிர்பார் பாரத், உள்ளூர் மயமாக்கல் திட்டங்கள் இதற்கு உறுதுணையாக இருகும்.
திட்டத்தின் பின்புலம்:
கொல்கத்தா மாநகருக்கும், அதனைச் சுற்றியுள்ள இதரபகுதிகளுக்கும் கொல்கத்தா கிழக்கு மேற்கு மெட்ரோ ரயில்பாதை, மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நகர்ப்புறதொடர்பு மேம்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகளுக்குச் சுகாதாரமான போக்குவரத்து வசதிகிடைக்கும்.
16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில்பாதை அமையவிருக்கிறது. இதற்காக ஹூக்ளி நதி மற்றும் ஹவுராரயில் நிலையங்களுக்கு அடியில் சுரங்க வழிப்பாதை தோண்டப்படும். நாட்டிலேயே முதன்முறையாக மிகப்பெரிய நதிக்கு அடியிலும், ஆழமான மெட்ரோரயில் நிலையமான ஹவுரா நிலையத்தின் அடியிலும் போக்குவரத்துச் சுரங்கப்பாதை தோண்டுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை ஆகும்
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |