ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியலால் சட்ட சபை தேர்தலில் திமுக.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்,” என மதுரையில் பாஜக., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐபிஎஸ்., அதிகாரியுமான அண்ணாமலை தெரிவித்தார்.
இம்மையில் நன்மைதருவார் கோயிலில் குடும்பத்தினருடன் அவர் தரிசனம் செய்தார். பின் அவர் கூறியதாவது: பா.ஜ.க, சித்தாந்தங்களுடன் ஒத்தகருத்து கொண்டவர்கள் இணைந்து வருகின்றனர். அந்தவரிசையில் தற்போது குஷ்பு உள்ளிட்ட மூவர் இணைந்துள்ளனர். குஷ்பூ எந்த கருத்தையும் ஆணித்தரமாக எடுத்துவைப்பவர். அவர் பா.ஜ.,வில் தனக்கான பணியை முன்எடுத்து செல்வார். குறுநில மன்னர்களை போல திமுக.,வில் குடும்ப அரசியல் தொடர்வதால் மக்களிடம் அதிருப்திநிலவுகிறது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் குற்றச் சாட்டுகள், திமுக., முன்னாள் மத்தியமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை போன்றவைகளால் தேர்தலில் தி.மு.க.,விற்கு எதிரான ஓட்டுக்களே அதிகம் விழும்.
அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல்நடந்தது போன்ற பிம்பத்தை திமுக., போன்ற எதிர்கட்சிகள் ஏற்படுத்துகின்றன. திமுக., போல அதிமுக.,விற்கு எதிராக ஆதாரப்பூர்வமான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை.பா.ஜ., அதிமுக., கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது என்கையில் இல்லை. தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன். தற்போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசென்று வருகிறேன், என்றார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |