குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும்போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல் செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
மத்திய ஊரகவளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், பசுமை செயல்பாட்டின் (ஆபரேஷன் கிரீன்ஸ்) கீழ் வழங்கப்படும் மானியம் தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு மிகபெரிய நடவடிக்கை என்றார்.
குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை எதிர்பார்த்த அளவைவிட குறையும்போது, அவற்றின் போக்குவரத்து மற்றும் பதனிடுதல்செலவில் 50 சதவீதம் மானியமாக ஆபரேஷன் கிரீன்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
தற்போது இந்தமானியம் கிசான் ரயில் திட்டத்திலும் எளிமையான முறையில் கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தமானியத்தை 19 வகையான பழங்களுக்கும் 14 வகையான காய்கறிகளுக்கும் பெறலாம்.
பழங்கள்: மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, கிவி, லிச்சி, மோசம்பி, ஆரஞ்சு, கின்னோ, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி, மாதுளை, பலா, ஆப்பிள், அவோன்லா, பேஷன் மற்றும் பேரிக்காய்.
காய்கறிகள்: பிரெஞ்ச் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடைமிளகாய், கேரட், காலிஃப்ளவர், பச்சைமிளகாய், ஒக்ரா, வெள்ளரிக்காய், பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |