விவசாயிகளுக்கு 20,000 கோடி அள்ளிகொடுக்கும் மோடி

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் பிஎம் கிசான் திட்டம் குறித்து நேற்று (ஜூன் 15) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 17வது தவணையாக சுமார் 20,000 கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்க இருப்பதாகத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 18ஆம் தேதியன்று வாரணாசியில் 17ஆவது தவணையை விடுவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், சுமார் 30,000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு கிருஷி சகி (வேளாண் தோழிகள்) என்ற சான்றிதழ்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் உத்தரப் பிரதேச மாநில அரசுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்ய இருக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை அடைய விவசாயம் மிக முக்கியமான அடித்தளம் என்று அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாக விவசாயம் உள்ளது என்று சிவராஜ் சிங் சௌகான் மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார். பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையாக ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையை வாரணாசியில் இருந்து பிரதமர் விடுவிக்கவிருக்கிறார். இதன்மூலம் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

பிஎம் கிசான் திட்டம் 2019 பிப்ரவரி 24ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் பயனாளிகளை பதிவு செய்வதிலும், சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் இதுவரை நாடு முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ. 3.04 லட்சம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் நேரலையில் இணைந்து பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார். 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவையும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.

3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும், இதில் சுமார் ஒரு கோடி லட்சாதிபதி பெண்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 2 கோடி பேர் லட்சாதிபதிகளாக உருவாக்கப்பட உள்ளதாகவும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...