கரோனா வைரஸ் பரவல்காரணமாகவே குடியுரிமமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறை படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வரும் என்று பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்றுள்ளார். அங்குள்ள ஆனந்தமாயி காளிகோயிலில் நட்டா வழிபாடு செய்தார்.
அதன்பின் பாஜக தொண்டர்கள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசியதாவது:
“மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி அரசு பிரிவினை, வகுப்புவாத அரசியலை நடத்துகிறது. அரசியல் நலன்பார்த்து மக்களுக்குச் சேவைசெய்கிறது. ஆனால், பாஜக அனைத்து மக்களுக்கும் சேர்த்து பணியாற்றுகிறது.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தில் அனைவரும் பயன்பெறுவார்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதை நடைமுறைப்படுத்த உறுதியாக இருக்கிறோம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவே குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது சூழல் முன்னேற்றம் அடைந்துவருகிறது. ஆதலால் சிஏஏவை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் குடியுரிமைத் திருத்தச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் பாஜக ஆட்சியை பிடிக்கும் என நம்புகிறோம். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும்வன்முறை, கமிஷன் போன்றவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்”.
இவ்வாறு நட்டா தெரிவித்தார்.
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |