மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது.

மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது.

மனு ஸ்மிருதி

3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.

மனு ஸ்மிருதி

9-3பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனேரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம்

அர்ஹதி உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது.

மனு ஸ்மிருதி

3-55பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததாபூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி

தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.

மனு ஸ்ம்ருதி

3-58ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதாதானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத

எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.

மனு ஸ்ம்ருதி

9-26ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தயஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன

தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.

மனு ஸ்ம்ருதி

9-11அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்சௌசே தர்மே அன்னபக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே

வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.

மனு ஸ்ம்ருதி

9-90ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மனு ஸ்ம்ருதி

9-130யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமாதஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத்

மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தந்தைக்கு ஒரு மகள் இருக்கும் போது, வேறொருவர் எப்படி அவர் சொத்தைக் கொண்டு செல்ல முடியும், மகளுக்கே சொத்தில் உரிமை உண்டு.

மனு ஸ்ம்ருதி

8-28வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு சபதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

மனு ஸ்ம்ருதி

8-352பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதிஉத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்

பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

கே.டி.ராகவன், பாஜக 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.