கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: யாரும் எதிர்பார்க்காத அளவில் இந்தியாவில் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் பல தடைகளை உடைத்து, முக்கிய பதவிகளில், சிறந்த பொறுப்புகளுடன் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. சில இடங்களில் ஆண்களை விட கூடுதலாக பணியாற்றும் பெண்களும் உள்ளனர்.
இது அனைத்திற்கும் பிரதமர் மோடி, பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களே காரணமாகும். பிரதமர் முத்ரா யோஜனா, ஸ்டாண்ட்- அப் இந்தியா, ஸ்கில் இந்தியா திட்டங்கள் வெறும் டோக்கன் திட்டங்கள் அல்ல. இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களை உந்து சக்தியாக பார்க்கிறோம், எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘பிற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்கள் அதிக மணிநேரம் வேலை செய்கிறார்கள். குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பெண்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். வாரத்திற்கு அதிகபட்சம் 55 மணிநேரம் வரை வேலை செய்கிறார்கள், எனக் கூறினார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |