”இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை அனைத்துமக்களுக்கும் கொண்டு சேர்க்கும்வகையில், ‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், நாடுமுழுதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், மத்திய அரசு கொண்டுவந்த நலத்திட்டங்களால், கோடிக் கணக்கான பயனாளிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இது, தைரியம், திருப்தி மற்றும் கனவுகளின் கதையாக உள்ளது.
மக்களுடன் பழகும்போது அவர்களின் தன்னம்பிக்கையைப் பார்ப்பது, எனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது.
ஒரு கோடிக்கும் அதிகமானபேருக்கு, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டமான, ‘ஆயுஷ்மான்’ அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 1.25 கோடி பேருக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோய்க்காக பரிசோதனை செய்துள்ளனர்.
இதுவே, முந்தையகால ஆட்சியாக இருந்திருந்தால், அரசு அலுவலகங்களை சுற்றிவந்தே மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பர்.நான், உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போன்றவர். என்னை நீங்கள் எளிதில்அணுகலாம்.
மத்திய பா.ஜ., ஆட்சியில், நாடுமுழுதும், 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர்.மேலும், வங்கிகள் வாயிலாக 7.5 லட்சம்கோடி ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டுள்ளன.
இரண்டுகோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதுதான், என் கனவு. விவசாயிகளுக்கு உதவும் வகையில் லட்சக்கணக்கான சேமிப்பு கிடங்குகளை உருவாக்கும்பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |