குஜராத் மாநிலத்தில் வேளாண்மைத் துறை, சுற்றுலாத்துறை, மருத்துவத் துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைத்தார்.
குஜராத் விவசாயிகளுக்கு பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டுநேரங்களிலும் மின்சாரம் வழங்கும் வகையில் கிசான் சூர்யோதயா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விவசாயிகளுக்கு காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்புடைய இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொலிக்காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.
மேலும் குஜராத்தில் சுற்றுலா வாசிகளுக்குப் பயன்படும் வகையில் ரோப்கார் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். 2.3 கிலோமீட்டர் தூரத்திற்கான ரோப் கார் மூலம் மலைக் காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுரசிக்க இயலும்.
இதனைத் தொடர்ந்து அமகதாபாத்திலுள்ள ஐ.நாவின் மேத்தா இருதவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திலுள்ள குழந்தைகள் இருதய மருத்துவமனையையும் காணொலிவாயிலாக பிரதமர் திறந்து வைத்தார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |